சிறந்த தமிழ் நூலுக்கு ரூ.6 லட்சம் பரிசு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறந்த தமிழ் நூலுக்கு ரூ.6 லட்சம் பரிசு

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் சார்பில், சிறந்த தமிழ் நுால் போட்டி நடக்கிறது. இதில், வெற்றி பெறும் தமிழ் நுாலுக்கு, ஆறு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.மலேஷியாவில் செயல்படும், கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் சார்பில், சிறந்த தமிழ் நுாலுக்கான போட்டி நடக்கிறது.
இப்போட்டிக்கு, நாவல், வரலாறு, ஆய்வு, சிறுகதை, கவிதை உள்ளிட்ட பிரிவுகளில் நுால்களை அனுப்பலாம்.இதில், கல்வி தகுதிக்காக உருவாக்கப்படும் ஆய்வேடு, ஏற்கெனவே வெளிவந்த நுால்கள், மறுபதிப்பு நுால்கள், நுாலாசிரியரின் சொந்த வரலாற்று நுால் ஏற்று கொள்ளப்படாது.ஒருவர், ஒரு படைப்பை மட்டுமே அனுப்ப வேண்டும். நுாலாசிரியரோ, நுாலை பதிக்கும் பதிப்பகத்தாரோ, நுால்களை போட்டிக்கு அனுப்பலாம்.
நுால்கள், போட்டி அறிவிக்கப்பட்ட, 2016 அல்லது 2017ம் ஆண்டில், முதற்பதிப்பாக இருக்க வேண்டும். போட்டிக்கு, ஐந்து நுால் பிரதிகளை, மார்ச், 31க்குள் அனுப்ப வேண்டும். மூன்று மாத பரீசிலனைக்கு பின், முடிவு அறிவிக்கப்படும்.இதில் வெற்றி பெறும் சிறந்த தமிழ் நுாலுக்கு, 6.50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். விண்ணப்பத்தை, tansrisomabookaward.com.my என்ற இணையதளப் பக்கத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.எண். 9, சாரங்கபாணி தெரு, தி.நகர், சென்னை - 17 என்ற முகவரிக்கு நுால்களை அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 044-28340488, 2834 3224; 9600007818 / 19 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X