காசிமேடு துறைமுகத்தில் தீ விபத்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காசிமேடு துறைமுகத்தில் தீ விபத்து

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காசிமேடு:காசிமேடு மீன் பிடி துறைமுக பகுதியில், நேற்று தீ விபத்து ஏற்பட்டது.சென்னை, காசிமேடு மீன்பிடித் துறைமுகம், 'ஜீரோ கேட்' பகுதி அருகே, மீன், இறால்களை பதப்படுத்தும் இடம் உள்ளது. இப்பகுதியில், மீன் கழிவுகள், தெர்மகோல் குப்பையை குவித்து வைத்து உள்ளனர்.இந்நிலையில், நேற்று, அங்கிருந்த தெர்மகோல்கள் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன. தீ மளமளவென பரவி, கொளுந்து விட்டு எரிந்தது.
தீ மேலும் பரவாமல் இருக்க, மற்ற தெர்மகோல்களை, மீனவர்கள் அப்புறப்படுத்தினர். ராயபுரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்தனர்.இப்பகுதியை சுற்றி பெட்ரோல் பங்க், ஐஸ் பேக்டரிகள் உள்ளதால், பெரிய தீ விபத்து தவிர்க்கப்பட்டது.சம்பவம் குறித்து, காசிமேடு மீன்பிடித் துறைமுக போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை