'க்யூ.ஆர்., கோடு' தொழில்நுட்பத்துக்கு மாறிய காஞ்சிபுரம் தொடக்க பள்ளி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'க்யூ.ஆர்., கோடு' தொழில்நுட்பத்துக்கு மாறிய காஞ்சிபுரம் தொடக்க பள்ளி

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

காஞ்சிபுரம்:திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 'க்யூ.ஆர்., கோடு' எனப்படும், 'குயிக் ரெஸ்பான்ஸ் கோடு' புதிய தொழில்நுட்பத்தில் பாடம் நடத்த ஆசிரியர்கள் துவங்கிஉள்ளனர்.
எளிய முறை
காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்படுகிறது.சுற்று வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளை காட்டிலும், இப்பள்ளியின், மாணவ - மாணவியரின் எண்ணிக்கை அதிகம்.ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை, 300 மாணவர்கள் பயில்கின்றனர். தனியார் பள்ளிகளை விட, நவீன தொழில்நுட்பத்தில் இப்பள்ளி செயல்பட்டு வருவதால், சுற்றியுள்ள கிராமப்புறங்களிலிருந்து இப்பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்க்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், க்யூ.ஆர்., எனப்படும், 'குயிக் ரெஸ்பான்ஸ் கோடு' மூலம், 4ம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு, எளிதான பாட வழிமுறைகள் இப்பள்ளியில் புகுத்தப்படுகின்றன.இப்பள்ளியின் நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்து, ஏற்கனவே, 'யூடியூப்' சேனலில், பள்ளி நிர்வாகம் தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னோட்டமாக, நான்காம் வகுப்பு பாட புத்தகங்களில் உள்ள ஒவ்வொரு பாடமும், வீடியோவாக தயாரிக்கப்பட்டு, 'யூ - டியூப் சேனலில்' பதிவேற்றம் செய்ய துவங்கியுள்ளனர்.வீட்டிலுள்ள மொபைல் போன் மூலம், க்யூ.ஆர்., கோடு ஸ்கேன் செய்தால் போதும்; பாடம் முழுவதும் வீடியோவாக மாணவர்களுக்கு காண்பிக்கப்படும்.
அந்த அளவிற்கு, நவீன தொழில்நுட்பங்களை, இப்பள்ளி ஆசிரியர்கள் மாணவ - மாணவியருக்காக செய்து வருகின்றனர்.முன்னோட்டமாக, நான்காம் வகுப்பு பயிலும், 66 மாணவ - மாணவியரின் ஒவ்வொரு பாட புத்தகங்களிலும், க்யூ.ஆர்., கோடு ஒட்டப்பட்டு உள்ளது.தொடர்ந்து, மற்ற வகுப்புகளுக்கும், இந்த புதிய தொழில்நுட்பங்களை புகுத்த பள்ளிநிர்வாகம் முடிவு செய்துஉள்ளது.
அரசு பள்ளியில் இது போன்ற தொழில்நுட்பங்களை கையாண்டு பாடம் நடத்துவதை, பிற பள்ளிகள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றன.'க்யூ.ஆர்., கோடு' தொழில்நுட்பத்துக்கு மாறிய காஞ்சிபுரம் தொடக்க பள்ளி

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை