ஆட்டோ கவிழ்ந்து 12 பெண்கள் காயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆட்டோ கவிழ்ந்து 12 பெண்கள் காயம்

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காஞ்சிபுரம்:தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்ற போது, ஷேர் ஆட்டோ கவிழ்ந்து, 12 பெண்கள் காயம் அடைந்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த வசந்த் நகர், பல்லாவரம், வளத்தோட்டம், குருவிமலை ஆகிய பகுதிகளில் உள்ள பெண்கள், உத்திரமேரூர் அருகே உள்ள களியாம்பூண்டி தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்வர். நேற்று காலை, அவர்கள் செல்லும் பேருந்து குறித்த நேரத்தில் வரவில்லை. வேலைக்கு நேரமாகி விட்டதால், அங்கு இருந்த, 12 பெண்கள், ஷேர் ஆட்டோவில் சென்றனர்.
குருவிமலையை சேர்ந்த சுரேஷ், 24, என்பவர், ஆட்டோவை ஓட்டி சென்றார். களக்காட்டூர் அடுத்து, வேடல் வளையில் திரும்பிய போது, ஆட்டோ திடீரென கவிழ்ந்தது.அதில் பயணம் செய்த, 12 பெண்களுக்கு காயம் ஏற்பட்டது. அப்பகுதியை சேர்ந்தவர்கள், அவர்களை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்கு பின், அவர்கள் அனைவரும் வீடு திரும்பினர். மாகரல் போலீசார் விசாரிக்கின்றனர்.
அறிவுரை வேண்டும்
அதிகபட்சம், ஐந்து பேர் பயணிக்கக் கூடிய ஆட்டோவில், 12 பெண்கள் பயணித்ததால் தான், விபத்து நிகழ்ந்துள்ளது. கிராமப்புறங்களில், இது போல, அதிக எண்ணிக்கையில் ஆட்டோக்களில் ஆட்கள் ஏறுவது வழக்கம் தான். எனினும், இத்தகைய தவறுகள் தொடராத வண்ணம், உள்ளூர் போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை