ஒரே இடத்தில் அனுமதி தொழில் மையம் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே இடத்தில் அனுமதி தொழில் மையம் தகவல்

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காஞ்சிபுரம்:தொழில் முனைவோர், புதிய தொழில் துவங்கவும் அல்லது விரிவுபடுத்த தேவையான அனைத்து அனுமதிகளும், ஒரே இடத்தில் பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்தி, மேம்படுத்த குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன தொழிற்கூடங்கள் நிறுவுவதில் ஏற்படும் சிக்கல்களை களைய, தொழில் வணிக வசதியாக்கல் சட்டம் மற்றும் விதிகளை, ஜனவரி மாதம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.இச்சட்டம் மூலம் தொழிற்கூடம் நிறுவுவதற்கு மற்றும் விரிவுபடுத்த தேவையான அனைத்து அனுமதிகளும், தடையின்மை சான்றிதழ்களும், ஒரே இடத்தில் சமர்ப்பித்து, குறித்த காலத்தில் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தொழிற்கூடங்கள் நிறுவுவதற்கு முந்தைய அனுமதிகள், நடைமுறை அனுமதிகள், புதுப்பித்தல் போன்ற, 54 வகையான அனுமதிகள் இச்சட்டத்தின் மூலம் பெறலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது.அனைத்து தொழில் முனைவோர்களும், www.investingintamilnadu.com எனும் இணைய முகவரியில், விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதலை பெறலாம்.மேலும் விபரங்களுக்கு, மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை, 044- 272338837 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை