முதல் தாளை விட ஆங்கிலம் இரண்டாம் தாள் எளிமை! பிளஸ் 1 மாணவ - மாணவியர் மகிழ்ச்சி பேட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதல் தாளை விட ஆங்கிலம் இரண்டாம் தாள் எளிமை! பிளஸ் 1 மாணவ - மாணவியர் மகிழ்ச்சி பேட்டி

Added : மார் 15, 2018
Advertisement

பிளஸ் 1 பொதுத்தேர்வில், நேற்று, ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வை, மாவட்டத்தில், 119 மையங்களில், 47 ஆயிரத்து, 664 மாணவ - மாணவியர் எழுதினர். எழுதிய மாணவ - மாணவியரிடம், தேர்வு எழுதியது குறித்து கேட்டோம். அவர்கள் அளித்த பதில், தொகுக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் முதல்-தாள் போன்றே, இரண்டாம் தாள் எளிமையாக இருந்தது. இரண்டு தேர்வுகளையும் குறித்த நேரத்தில் எழுதினேன். பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்த வினாக்களிலிருந்தே, அதிகமாக கேட்கப்பட்டது. நல்ல மதிப்பெண் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன்.
பி.சினேகாஅரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு
ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு எழுதினேன். இதில் முதல் மதிப்பெண் வினாக்கள், பிராவர்ப் வினாக்கள், மூன்று மதிப்பெண் வினாக்கள் ஆகியவை மட்டும் கடினமாக இருந்தன. இருப்பினும் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எப்பேன்.
இ.பிரவின்குமார்வி.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருக்கழுக்குன்றம்
ஆங்கிலம் முதல்தாள் கடினமாக இருந்தன. ஆங்கிலம் இரண்டாம் தாள் எளிமையாக இருந்தன. இரண்டு மணி நேரத்தில் தேர்வு எழுதி உள்ளேன். ஆங்கில பாடத்தில், 85 மதிப்பெண் பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
ஏ.லாவண்யாஅரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு
இதுவரை நடந்த தமிழ் இரு தாள்கள், நேற்று நடந்த ஆங்கிலம் முதல் தாள் தேர்வை விட, வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தன. அனைத்து வினாக்களுக்கும் விடையளித்துள்ளேன். 90 மதிப்பெண் பெறுவேன்.
எம்.நேசிகாஅரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெரிய காஞ்சிபுரம்
ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில், இரண்டு மதிப்பெண் வினாக்கள் மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தன. ஏற்கனவே கடுமையான பயிற்சி எடுத்திருந்ததால், நல்ல முறையில் தேர்வு எழுத உதவியாக இருந்தது. இத்தேர்வில் அதிக மிதிப்பெண் பெறுவேன்.
ஹர்ஷவர்த்தினிஅரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, உத்திரமேரூர்
அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்தன. ஆனால், ஐந்து மதிப்பெண் வினாக்கள் மட்டுமே எனக்கு கடினமாக இருந்தது. இதனால், நீண்டநேரம் யோசித்து விடையளித்தேன். 90 மதிப்பெண்ணுக்கு மேல் கிடைக்கும்.
ஆர்.சங்கர் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்
ஆங்கிலம் முதல் தாளை போன்று, இரண்டாம் தாளும் எளிமையாக இருந்தது. இரண்டு, மூன்று, ஐந்து மதிப்பெண் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தன. இத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவேன்.
ஆர்.தீபிகா சோழன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்
ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் படித்த வினாக்களாக இருந்தன. பெரும்பாலான வினாக்களுக்கு விடையளித்துள்ளேன். அதிக மதிப்பெண் கிடைக்கும்.
பி.சந்தானம் அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யன்பேட்டை
ஒரு மதிப்பெண் வினாக்களின், மூன்று கேள்விகள் கடினமாக இருந்தன. பெரிய வினாக்கள் எளிமையாக இருந்தன. இரண்டு மணி நேரத்தில் தேர்வு எழுதி முடித்தேன். 90 மதிப்பெண் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
கே.மஹாலட்சுமி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு
ஆங்கிலம் இரண்டாம் தாளில், பகுதி -1ல், கேட்கப்பட்ட வினாக்கள் சிந்தித்து விடையளிக்கும் படி இருந்தன. நிச்சயம் முழு மதிப்பெண் பெறுவேன்.
கி.கீர்த்தனாசோழன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்
ஆசிரியர்கள் கூறிய பெரும்பாலான வினாக்கள் தேர்வில் இடம்பெற்றிருந்தன. அதனால், பெரும்பாலான வினாக்களுக்கு, விடையளிக்க முடிந்தது. இதன் மூலமாக கணிசமான மதிப்பெண் பெறுவேன்.
எல்.மோகன்அ ரசு மேல்நிலைப்பள்ளி, நாயக்கன்பேட்டை
பிளஸ் 1 ஆங்கிலம் முதல் தாள் தேர்வைக் காட்டிலும், இரண்டாம் தாள் தேர்வு சற்று கடினமாகத்தான் இருந்தது. நினைவில் இல்லாத ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததால் பதில் அளிப்பதில் சிரமம் இருந்தது. எனினும் ஆசிரியர்களின் தொடர் பயிற்சி காரணமாக சிறப்பான முறையில் தேர்வு எழுதி உள்ளேன். எதிர்பார்த்த அளவிற்கான மதிப்பெண் கிடைக்கும்.
யஷ்வந்த் லயோலா மேல்நிலைப் பள்ளி, உத்திரமேரூர்
ஆங்கிலம் முதல் தாளை போல், இரண்டாம் தாள் தேர்வும் கடினமாக இருந்தது. குறிப்பாக, ஒரு மதிப்பெண் வினாக்கள் மிகவும் கடினமாக இருந்தன. 70 மதிப்பெண்ணுக்கு விடையளித்துள்ளேன். எத்தனை கிடைக்குமோ தெரியவில்லை!
டி.சிவசெல்வம் அந்திரசன் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்
ஆங்கிலம் முதல் தாளை போல் கடினமாக இருக்கும் என, நினைத்தேன். ஆனால், ஆங்கிலம் இரண்டாம் தாளில், அனைத்து வினாக்களும் மிகவும் எளிமையாக இருந்தன. 80 மதிப்பெண்களுக்கு பெறுவேன்.
ஏ.சங்கீதா,அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெரிய காஞ்சிபுரம்
ஆங்கிலம் முதல் தாள் மற்றும் இரண்டாம்தாள் எளிமையாக இருந்தது. அனைத்து வினாக்களுக்கும் பதில் எடுதி உள்ளேன். நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
எஸ். பூஜாஸ்ரீ,அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி, செங்கல்பட்டு

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை