ஸ்ரீபெரும்புதூரில் இறந்தது குரங்கு சோகத்துடன் மக்கள் ஈமச்சடங்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீபெரும்புதூரில் இறந்தது குரங்கு சோகத்துடன் மக்கள் ஈமச்சடங்கு

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, கட்சிபட்டு கிராமத்தில் சுற்றித் திரிந்த குரங்கு இறந்ததை அடுத்து, சோகம் அடைந்த மக்கள், குரங்கிற்கு ஈமச்சடங்கு செய்து, மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.
ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த ஊரில், 1,000 ஆண்டுகளுக்கு முன் அவதரித்தவர், வைணவ மகான் ராமானுஜர். சமூக, சமய சீர்திருந்தங்களை, 950 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தியவர்.அனைத்து தரப்பு மக்களும் கோவிலுக்கு சென்று வழிபடலாம் என, அந்த காலத்திலேயே புரட்சி செய்தவர், மகான் ராமானுஜர்.
இதனால், ஸ்ரீபெரும்புதுார், கச்சிபட்டு கிராமங்களைச் சேர்ந்த, ஏழை, எளிய மக்கள், ஸ்ரீராமானுஜர் மீது மிகுந்த பக்தி கொண்டுள்ளனர்.குறிப்பாக, கச்சிபட்டு கிராம மக்கள், ராமானுஜரை, 'தாத்தா' என, மரியாதையுடன் அழைக்கின்றனர்.ஸ்ரீபெரும்புதுாரில் ஏராளமான குரங்குகள் வாழ்கின்றன. அவற்றை, கச்சிபட்டு கிராம மக்கள், ஆஞ்சனேயராக கருதி, எந்த தொந்தரவும் செய்வதில்லை.
இந்நிலையில், கச்சிபட்டு பகுதியில் ஆண் குரங்கு ஒன்று, கடந்த சில நாட்களாக சுற்றித்திரிந்தது.வீடுகளுக்குள் புகுந்து, உணவு பண்டங்களை திருடி, சேட்டை செய்தாலும், கிராம மக்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்து கொண்டதில்லை.வயது முதிர்வு காரணமாக, அந்த குரங்கு நேற்று இறந்தது. இதை பார்த்த அந்த கிராம மக்கள், சோகமடைந்தனர். குரங்கின் உடலுக்கு இறுதி சடங்கு நடத்த முடிவு செய்து, மனிதர்களுக்கு ஈமச்சடங்கு செய்வது போல், குரங்கிற்கும் செய்தனர்.
இறந்த குரங்கிற்கு மலர் மாலைகள் அணிவித்து, அதன் தலை மாட்டில், அகல் விளக்கு ஏற்றி, தேங்காய் உடைத்து, ஊதுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.மேலும், தாரை, தப்பட்டையுடன், பஜனை பாடல் பாடி, பாடையில் குரங்கின் உடலை துாக்கி வைத்து, ஊர்வலமாக எடுத்து சென்று, தகனம் செய்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இறந்த குரங்கிற்கு அஞ்சலி செலுத்தி, அடக்கம் செய்வது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே, இது போல், சில குரங்குகளுக்கு செய்துள்ளோம். எங்களை பொறுத்தவரை, குரங்கை ஆஞ்சனேயராக வழிபடுகிறோம்' என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை