தனியார் தொழிற்சாலையால் பள்ளி பொலிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் தொழிற்சாலையால் பள்ளி பொலிவு

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பென்னலுார்:தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தால், பென்னலுார் அரசு பள்ளி, புது பொலிவை பெற்றுள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பென்னலுார் ஊராட்சியில், அரசு நடுநிலை பள்ளி உள்ளது. இங்கு, 103 மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.அடிப்படை வசதிகள் இன்றி இருந்த இந்த பள்ளியை, 'ஏசியன் பெயின்ட்' தொழிற்சாலை நிர்வாகத்தினர், சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம், சீரமைக்க முன்வந்தனர்.
கழிப்பறை, ஆழ்துளை கிணறு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், எளிமைபடுத்திய செயல்வழி கற்றல், டேபிள், நாற்காலிகள், சுற்றுச் சுவர், சுவர் ஓவியங்களை வரைந்து கொடுத்துள்ளனர்.இதனால், பென்னலுார் அரசு பள்ளி, புது பொலிவுடன் காட்சி அளிக்கிறது.இதேபோல், ஸ்ரீபெரும்புதுார் சுற்றியுள்ள அனைத்து தொழிற்சாலை நிர்வாகத்தினரும், அடிப்படை வசதி இல்லாமல் உள்ள அரசு பள்ளிகளுக்கு, தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை