மைதானத்திற்கு சுற்றுச்சுவர் ஆசிரியர்கள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மைதானத்திற்கு சுற்றுச்சுவர் ஆசிரியர்கள் கோரிக்கை

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ரெட்டமங்கலம்:ரெட்டமங்கலத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைாதானத்திற்கு, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், ரெட்டமங்கலம் கிராமத் தில், அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி இயங்கு கிறது. அப்பகுதியை சுற்றியுள்ள ஆலஞ்சேரி, தோட்ட நாவல், வளத்தோடு உட்பட, பல கிராமங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.இப்பள்ளியின் பின்புறத்தில் உள்ள இடத்தை, விளையாட்டு மைதானமாக, மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த இடத்தை சுற்றி, புதர்மண்டி உள்ளது.
இதனால், விஷ ஜந்துக்கள், பள்ளி வளாகத்திற்கு வருவதால், விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை