பாலாற்று படுகையில் கனிம வள துறை ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாலாற்று படுகையில் கனிம வள துறை ஆய்வு

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வாயலுார்:பாலாற்று படுகை பகுதிகளில், மணல் திருட்டு குறித்து, கனிமவளத் துறையினர் ஆய்வு நடத்தினர்.
கல்பாக்கம் அடுத்த, வாயலுார், ஆயப்பாக்கம், நல்லத்துார் உள்ளிட்ட பாலாற்று கரையோர ஆற்றுப் படுகையில், அப்பகுதியினர், மாட்டு வண்டி, டிராக்டர் மூலம், சட்ட விரோதமாக மணல்கடத்துகின்றனர்.வீட்டு வளாகம், மறைவிட பகுதிகளில் குவித்து, சென்னை உள்ளிட்ட பகுதிளுக்கு விற்கின்றனர். போலீசார், பெயரளவிற்கே வழக்கு பதிவதால், மணல் கடத்தல் அதிகரித்தே வருகிறது. கனிமவளத் துறைக்கு, இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் வந்தன.
இந்நிலையில், அத்துறை சிறப்பு வட்டாட்சியர், நெரும்பூர் குறுவட்ட வருவாய் துறையினருடன், இப்பகுதிகளில் ஆய்வு நடத்தினார். பல வீடுகளில் குவிக்கப்பட்டிருந்த மணல் குறித்து, வீட்டு நபர்களிடம் விசாரித்த போது, சொந்த பயன்பாட்டிற்கு வைத்திருப்பதாக, அவர்கள் தெரிவித்தனர்.ஆய்வில், மணல் பறிமுதல் செய்யப்படவில்லை.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை