இல்லீடு விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இல்லீடு விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

இல்லீடு:கூட்டு பண்ணை திட்டத்தில், விவசாய உற்பத்தியாளர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.சித்தாமூர் வட்டாரத்தில், 'அட்மா' விரிவாக்க திட்டம், கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ், தேசிய வேளாண் நிறுவனம் சார்பாக, விவசாய ற்பத்தியாளர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி, இல்லீடு கிராமத்தில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் வேளாண் துணை இயக்குனர் கரோலின் தலைமையில், கூட்டு பண்ணை உழவர் உற்பத்தியாளர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டது.நிறுவனத்தை எப்படி ஆரம்பிப்பது, அதன் செயல்பாடுகள் மற்றும் தீர்மான பதிவேடு, சேமிப்பு பதிவேடு, பண பதிவேடு உள்ளிட்டவற்றை எவ்வாறு பராமரிப்பது குறித்து, விவசாயி களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.இதில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் சித்தாமூர் வேளாண் துணை இயக்குனர் மணிகண்டன், தொழில்நுட்ப மேலாளர், ஏ.ஜெகதீசன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை