மீனவர்கள் வலையில் சிக்கும் கவளை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மீனவர்கள் வலையில் சிக்கும் கவளை

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பழவேற்காடு:பழவேற்காடு கடலில், விலை குறைவான, 'கவளை' வகை மீன்கள், அதிக அளவில் கிடைத்து வருகின்றன.பழவேற்காடு, கூனங்குப்பம், சாட்டன்குப்பம் உள்ளிட்ட கிராம மீனவர்கள், கடலில் மீன்பிடி தொழில் செய்கின்றனர். மீனவர்கள் வலையில், சில தினங்களாக, 'கவளை' வகை மீன்கள் அதிகளவில் சிக்குகின்றன. இவ்வகை மீன்கள், 15 நாட்களாக கிடைப்பதாகவும், ஏப்ரல் மாத இறுதி வரை, இவை கிடைக்கும் எனவும், மீனவர்கள் கூறுகின்றனர். அதிகாலை, 2:00 மணிக்கு, படகுகளில் கடலுக்கு செல்லும் மீனவர்கள், பகல், 12:00 மணிக்கு, இவ்வகை மீன்களுடன் கரை திரும்புகின்றனர்.அவற்றை ஏரிக்கரைகளில் தயாராக இருக்கும் சிறு மற்றும் மொத்த வியாபாரிகளிடம் ஏலம் முறையில் விற்பனை செய்கின்றனர். 10 கிலோ எடை கொண்ட ஒரு கூடை, 500 - 600 ரூபாய் வரை ஏலம் விடப்படுகிறது.சிறு வியாபாரத்தில் ஈடுபடும் பெண்கள், அவற்றை வாங்கி கிராமங்களுக்கு சென்று விற்பனை செய்கின்றனர்.
கேரள மக்கள் மிகவும் விருப்பமான மீன்களில், கவளை வகை இருப்பதால், மொத்த வியாபாரிகளும் கவளை மீன்களை வாங்கி, ஐஸ்பெட்டிகளில் அடைத்து கேரள மாநிலத்திற்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.மற்ற மீன்களின் வரத்து குறைவாக இருப்பதாகவும், விலை குறைவான கவளை வகை மீன்கள் அதிகளவில் கிடைப்பதாகவும், எதிர்பார்த்த அளவிற்கு இல்லையென்றாலும் ஒரளவிற்கு வருவாய் இருப்பதாகவும், மீனவர்கள் கூறுகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை