குளம் தூர் வாரியதால் கிடைத்தது பலன் வறண்ட குளத்தில் தேங்கியது தண்ணீர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குளம் தூர் வாரியதால் கிடைத்தது பலன் வறண்ட குளத்தில் தேங்கியது தண்ணீர்

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவள்ளூர்,:பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த குளம், துார்வாரியதால், கோடையிலும் வற்றாமல் தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கிறது.
பூண்டிய ஒன்றியத்திற்கு உட்பட்டது கொசவன்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில், திருத்தணி தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள கோவில் குளம், துார்ந்து போய் இருந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு, இந்த குளம் துார்வாரப்பட்டது. தொடர்ந்து பெய்த மழை நீர் இந்த குளத்தில் தேங்கியது.
தற்போது, கோடை வெயில் கொளுத்த துவங்கி விட்ட நிலையில், தண்ணீர் வற்றாமல் உள்ளது.இதன் காரணமாக, அருகில் உள்ள விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு தேவையான அளவு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. துார் வாரியதால், கைமேல் கிடைத்த பலனை கருத்தில் கொண்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து, குளம் மற்றும் ஏரிகளையும் முறையாக துார் வாரினால், தண்ணீர் தேங்கி, விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பலனளிக்கும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை