பொன்னேரி நீர்நிலைகளில் உணவு தேடும் வாத்துகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொன்னேரி நீர்நிலைகளில் உணவு தேடும் வாத்துகள்

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பொன்னேரி:முட்டை மற்றும் கறிக்கு வளர்க்கப்படும் வாத்துகள், நீர்நிலைகள் மற்றும் வயல்வெளிகளில் இரை தேட வருகின்றன.
பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராமங்களில், 200க்கும் மேற்பட்ட வாத்து வளர்ப்பவர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும், 800 - 1000 வரையிலான வாத்துகளை வைத்து பராமரிக்கின்றனர். முட்டை மற்றும் கறிக்காக இவை வளர்க்கப்படுகின்றன.மேலும், சம்பா அறுவடைக்கு பின், ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வாத்து வளர்ப்பவர்கள் தங்கள் வாத்துகளுடன் கிராமங்களில் முகாமிடுகின்றனர். அறுவடை முடிந்த விளைநிலங்களில் சிதறி கிடக்கும் நெல்மணிகளை வாத்துகள் உணவாக எடுத்து கொள்கின்றனர்.
இதற்காக, விவசாயிகளுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்குகின்றனர். வாத்து வளர்ப்பவர்கள், வாத்துகள் இடும் முட்டைகளை, விற்பனை செய்து அதன் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை காத்து வருகின்றனர். தற்போது, கிராமங்களில் உள்ள நிர்நிலைகள், வயல்வெளிகளில் வாத்துகள் இரை தேடி குவிந்து டக்கின்றன.இது குறித்து, வாத்து வளர்ப்பவர்கள் கூறியதாவது:முட்டைக்காகவும், கறிக்காகவும் வாத்துகளை வளர்க்கிறோம். வாத்துகள் இரண்டு ஆண்டுகள் வரை முட்டைஈடும். சந்தை நிலவரத்திற்கு தகுந்தபடி முட்டைகள் விலைபோகும். முட்டையை நிறுத்தும் வாத்துகளை கறிக்காக விற்பனை செய்து விடுவோம்.மேலும், ஒரு ஜோடி, 300 - 400 ரூபாய் வரை விலைபோகும். நீர் நிலைகள் வறண்டு வருவதால், வாத்துக்களுக்கு இரைதேடுவது பெரும் சிரமமாக உள்ளது.இதற்காக விவசாயிகளிடம் குறிப்பிட்ட தொகையை கொடுத்து, வயல்களில் நீர்பாய்ச்சி அதில் வாத்துகளை விட்டு வளர்ப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை