மின் மாற்றி திறன் கூட்ட கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின் மாற்றி திறன் கூட்ட கோரிக்கை

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில் இருந்து, சுண்ணாம்புக்குளம் செல்லும் சாலையோரம், சின்னகொக்குபாளையம் சந்திப்பில், ஏழு ஆண்டுகளுக்கு முன், 25 கே.வி., மின்மாற்றி அமைக்கப்பட்டது. ஓராண்டு மட்டுமே வேலை செய்த நிலையில், ஆறு ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ளது.
அதனால், சின்னகொக்குபாளையம், பெரியகொக்குபாளையம் ஆகிய பகுதிகளுக்கு, சுண்ணாம்புக்குளம் பஜாரில் உள்ள மின் மாற்றியில் இருந்து, மின் வினியோகம் செய்யப்படுகிறது. வீட்டில் உள்ள மின் விளக்குகளும், குறைந்த அழுத்த மின்சாரத்தில் இயங்குகின்றன.
அதனால், தேர்வுக்கு தயாராகும் பள்ளி மாணவ - மாணவியர் தவிக்கின்றனர். பளு அதிகரிப்பால், சுண்ணாம்புக்குளம் பஜாரில் உள்ள மின் மாற்றியும் அடிக்கடி பழுதாகும் நிலை ஏற்படுகிறது.பயன்பாடின்றி கிடக்கும் மின் மாற்றியை, 100 கே.வி.,யாக திறன் கூட்டி, சின்னகொக்குபாளையம் மற்றும் பெரியகொக்குபாளையம் பகுதிக்கு, மின் வினியோகம் செய்ய வேண்டும் என, எளாவூரில் உள்ள, உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை