திருத்தணியில் ஆக்கிரமிப்பு பணி மீண்டும் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருத்தணியில் ஆக்கிரமிப்பு பணி மீண்டும் துவக்கம்

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருத்தணி,:திருத்தணி நகராட்சியில் உள்ள மாநில நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள், ஜே.சி.பி., இயந்திரம் மூலம், நேற்று துவங்கப்பட்டன
திருத்தணி நகராட்சியில், சித்துார் சாலை, ம.பொ.சி. சாலை, அரக்கோணம், கடப்பா டிரங்க் ரோடு, அக்கைய்யா நாயுடு சாலை ஆகிய இடங்களில், நெடுஞ்சாலையோரம் கடை வியாபாரிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் ஆக்கிரமித்து கட்டியுள்ளனர். மேலும், சாலையோரம் அனுமதியின்றி பல்வேறு கட்சியினர் மற்றும் தனி நபர்கள் பேனர்களை வைத்திருந்தனர்.
இதனால், திருத்தணியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் நடந்து வந்தன. இதையடுத்து, போக்குவரத்து நெரிசல் தவிர்க்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வருவாய் துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் ஆகியவை தீர்மானித்தன.தொடர்ந்து, 3ம் தேதி, ம.பொ.சி.சாலை, சித்துார் சாலை ஆகிய இடங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை, ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றினர்.
அன்று மாலை வரை, ம.பொ.சி. சாலை, காய்கறி மார்க்கெட் வரை உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.பின், பல்வேறு காரணங்களால், ஆக்கிரமிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், நேற்று காலை, மீண்டும் ஆக்கிரமிப்பு பணிகள் துவங்கின. திருத்தணி தாசில்தார் நரசிம்மன், நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப்பொறியாளர் உமாசெல்வன், நகராட்சி ஆணையர் முருகேசன், இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் அரசு அதிகாரிகள்,ஜே.சி.பி., இயந்திரம் மூலம், அரக்கோணம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
திருத்தணி நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நகராட்சியில் செல்லும் மாநில நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும்.இன்று (நேற்று) அரக்கோணம் சாலையில் ஆக்கிரமிப்புகள் மீண்டும் துவங்கப்பட்டது. மீதமுள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மின்சார துறையினர் மெத்தனம்
மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள மின் கம்பங்களை இடமாற்றம் செய்வதற்கு, மின்சார துறையினருக்கு குறிப்பிட்ட தொகையை நெடுஞ்சாலை துறையினர் செலுத்தி உள்ளனர்.அதாவது, 2007- - 08ல், ம.பொ.சி. சாலையில் உள்ள மின் கம்பங்களை இடமாற்றத்திற்கு, 4.32 லட்சம் ரூபாயும், மூன்று மாதம் முன், அரக்கோணம் சாலையில் உள்ள மின் கம்பங்களை இடமாற்றம் செய்ய, 5.50 லட்சம் ரூபாயும், நெடுஞ்சாலை துறையினர், மின்வாரிய துறையினருக்கு செலுத்தியுள்ளனர்.
ஆனால், இதுவரை மின் கம்பங்கள் இடமாற்றம் செய்யாததால், ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்றி, சாலை விரிவாக்கம் செய்ய முடியாமல் திணறி வருகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை