மாணவர்களை பாதுகாக்க பள்ளிக்கு சுற்றுச்சுவர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களை பாதுகாக்க பள்ளிக்கு சுற்றுச்சுவர்

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கும்மிடிப்பூண்டி:ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது.
கும்மிடிப்பூண்டி அருகே, ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. பள்ளியை ஒட்டி, ஏரிகளுக்கான நீர்வரத்து கால்வாய் அமைத்திருப்பதால், மாணவர்கள் விளையாடும் போது, அந்த கால்வாயில் தவறி விழ நேரிடும் என, பெற்றோர் அச்சத்தில் இருந்தனர்.
இந்நிலையில், அந்த பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க, தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், 5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து, நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பு நிறைவேறிய மகிழ்ச்சியில் பெற்றோர் உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை