சேப்பங்கிழங்குக்கு கீரையுடன் கூட்டு!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேப்பங்கிழங்குக்கு கீரையுடன் கூட்டு!

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஆர்.கே.பேட்டை:முக்கிய உணவு பயிர்களுடன், காய்கறிகள் மற்றும் மலர் சாகுபடியிலும் ஈடுபட்டு விவசாயிகள் லாபம் ஈட்டி வருகின்றனர். விளைச்சலுக்கு பங்கம் ஏற்படாத சேப்பங்கிழங்கும் அதில் ஒன்று.
ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில், நெல், கரும்பு உள்ளிட்டவற்றுக்கு அடுத்தபடியாக, காய்கறிகள் மற்றும் மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நெல் மற்றும் கரும்பில் விளைச்சலை முன்கூட்டியே உறுதியாக சொல்ல முடிவது இல்லை,ஆனால், மலர் மற்றும் காய்கறி ரகங்களில், நம்பிக்கையுடன் காத்திருக்கலாம். மேலும், சந்தை நிலவரத்தை பொறுத்து, நெல் கொள்முதல் விலையில் திடீர் மாற்றம் ஏற்படக்கூடும்.ஆனால், காய்கறி ரகங்களின் விலையில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது. மேலும், தங்களின் தோட்டத்தில் விளையும் காய்கறிகளை, விவசாயிகளே நேரடியாக, உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்து விடுகின்றனர்.
ஞாயிறு கே.ஜி.கண்டிகை, திங்கள் அத்திமாஞ்சேரி, செவ்வாய் ஆர்.கே.பேட்டை, வியாழன் வங்கனுார், வெள்ளி பலிஜி கண்டிகை, சனிக்கிழமை பள்ளிப்பட்டு என, நாள்தோறும் ஒரு பகுதியில் கூடும் வார சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.காய்கறி ரகங்களில், சேப்பங்கிழங்கு ஆர்.கே.பேட்டை அடுத்த, விளக்கணாம்பூடி, பீமாரெட்டியூர், செங்கட்டானுார், பைவலசா உள்ளிட்ட பகுதியில் அதிகளவில் பயிரிடப்படுகிறது.
சேப்பங்கிழங்கு செடிகளை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் தீண்டுவது இல்லை. செடியின் வளர்ச்சி காலத்தில், முறையாக பாத்தி அமைத்து பாசனம் செய்யப்படும் தோட்டங்களில், கீரை ரகங்களும் தானாக முளைத்து வளர்கின்றன. இவற்றை. விவசாயிகள் பறித்து விற்பனை செய்கின்றனர்.
சேப்பங்கிழங்கு செடிகள் முதிர்ச்சி அடைந்ததற்கான அறிகுறியாக, அந்த செடிகளில், பூக்கள் தோன்றும்; அதை தொடர்ந்து, நீர் பாசனம் நிறுத்தப்படும். தண்டு காய்ந்ததும், வேர் பகுதியில் உள்ள கிழங்கு பிரித்து, விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். ஒரு கிலோ சேப்பங்கிழங்கு, 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை