90 உறுப்பினர்களுக்கு மேலாண்மை பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

90 உறுப்பினர்களுக்கு மேலாண்மை பயிற்சி

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிப்பட்டு:அரசு நடுநிலை பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதில், 90 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பள்ளிப்பட்டு ஒன்றியம், கர்லம்பாக்கம் அரசு நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடந்தது.தலைமையாசிரியர் பி.கே.மூர்த்தி தலைமையில் நடந்த பயிற்சியில், ஆசிரிய பயிற்றுனர்கள் எம்.எம்.மாதவன் மற்றும் செந்தில்குமார் கருத்தாளர்களாக பங்கேற்று, பயிற்சி அளித்தனர்.
பயிற்சியில், அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், கல்வி சார்ந்த பிரச்னைகளை எதிர்கொள்வது குறித்தும், குழந்தைகளின் கல்வி உரிமை குறித்தும் விவாதிக்கப்பட்டது.இதில், பள்ளிப்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட 15 பள்ளிகளில் இருந்து, தலைமையாசிரியர் மற்றும் ஐந்து உறுப்பினர்கள் என, மொத்தம், 90 பேர் பங்கேற்றனர். சாமிநாயுடு கண்டிகை அரசு பள்ளி தலைமைஆசிரியர் கே.லோகநாதன், நன்றி உரைஆற்றினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை