வறட்சி பகுதிகளில் கேழ்வரகு பயிர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வறட்சி பகுதிகளில் கேழ்வரகு பயிர்

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பொன்னேரி:மழையை நம்பி விவசாயம் செய்யப்படும் வறட்சி பகுதிகளில், கேழ்வரகு பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு உள்ளனர்.
பொன்னேரி அடுத்த, தேவம்பட்டு, அகரம், பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் வறட்சியான பகுதிகளாகும். இப்பகுதிகளில் நிலத்தடி நீர் உவர்ப்பாக இருப்பதால், மழை மற்றும் நீர்நிலைகளில் தேங்கும் நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வருகின்றனர்.ஆண்டுக்கு ஒருமுறை மட்டும், சம்பா பருவத்தின்போது, நெல் பயிரிடுகின்றனர்.
சம்பா பருவத்திற்கு பின், விவசாயிகள் நிலங்களை தரிசாக போடுகின்றனர். நிர்நிலைகளை ஓட்டியும், அதில் தேங்கியுள்ள மழைநீரை பயன்படுத்தியும், ஒரு சில விவசாயிகள் நிலக்கடலை, மிளகாய் உள்ளிட்ட தோட்டப் பயிர்களை வளர்த்து வருகின்றனர்.
இந்த ஆண்டு, கேழ்வரகு பயிரிடுவதில், விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டு உள்ளனர். நாற்றாங்கால் முறையை பின்பற்றி விளைநிலங்களை நன்கு உழுது, பாத்தி கட்டி, அதில் நாற்று நட்டு உள்ளனர். இதன் பருவகாலம், 80 நாட்கள் என்பதால், மே மாதத்தில் அறுவடைக்கு தயாராகும் நிலையில் பயிரிடப்பட்டு உள்ளது.
உழவு, நடவு, மருந்தினங்கள் என, ஒரு ஏக்கருக்கு, 10 - 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. அறுவடை காலத்தில், ஏக்கருக்கு, 10 மூட்டை வரை கிடைக்கும் எனவும், தற்போதைய சந்தை நிலவரப்படி, 100 கிலோ மூட்டை, 3,000 - 3,500 ரூபாய் விலை போவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
மேலும், விளைநிலத்தை தரிசாக போடாமல், எதிர்பார்த்த லாபம் இல்லையென்றாலும், ஓரளவிற்கு வருவாயும். கோடையில் குளிர்ச்சியான உணவிற்கு உதவுகிறோம் என்கிற மன திருப்தி கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X