வாலிபரை தாக்கியவர் சிறையில் அடைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபரை தாக்கியவர் சிறையில் அடைப்பு

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடம்பத்துார்:கடம்பத்துார் அருகே, வாலிபர் மற்றும் பெண்ணை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.கடம்பத்துார் ஊராட்சிக்குட்பட்ட கசவநல்லாத்துாரைச் சேர்ந்தவர் பழனி மகன் சதீஷ், 23. நேற்று முன்தினம், இவர், வீட்டில் இருந்தபோது அருகில் வசிக்கும் நிர்மலா, 28, ஜெனிபர் மற்றும் அவரது உறவினர்களான ராமதாஸ், மோகன், பாஸ்கர் ஆகியோர் சதீஷின் வீட்டிற்கு வந்து, தகராறில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், சதீஷ் மற்றும் அவரது சித்தி சாந்தியை, ஐந்து பேரும் தாக்கியுள்ளனர்.
இதில், காயமடைந்த இருவரும், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து, கடம்பத்துார் போலீசில், சதீஷ் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்குப் பதிந்து, ராமதாஸ் என்பவரை நேற்று, கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை