ஜி.எஸ்.டி., உள்ளீட்டு வரி 60 நாளில் திரும்ப பெறலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.எஸ்.டி., உள்ளீட்டு வரி 60 நாளில் திரும்ப பெறலாம்

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, மதுரை மடீட்சியாவில் உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஜி.எஸ்.டி.,யில் (சரக்கு மற்றும் சேவை வரி) உள்ளீட்டு வரியை திரும்ப பெறுவது குறித்த விளக்கக் கூட்டம் நடந்தது.
மத்திய ஜி.எஸ்.டி., உதவி கமிஷனர் நாகலிங்கம் பேசியதாவது:
பொருளை உற்பத்தி செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யாமல் இடைத் தரகராக இருப்பவர் வரி கட்டி பொருளை வாங்கி, மீண்டும் வரி கட்டி ஏற்றுமதி செய்ய வேண்டும்.
வெளி மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்ய 0.1 சதவீதம் ஐ.ஜி.எஸ்.டி., மற்றும் உள் மாநிலத்தில் ஏற்றுமதி செய்ய 0.05 ஐ.ஜி.எஸ்.டி., சி.ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும்.
இப்படி செலுத்திய வரியை மீள் வரியாக திரும்ப பெற்றுக் கொள்ளலாம். முறையான ஆவணங்களை தாக்கல் செய்த பின் 15 நாளில் ஒப்புதல் கிடைககும் 7 நாளைக்குள் 90 சதவீத வரியும், 60 நாளில் மீதமுள்ள வரியும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம், என்றார்.
மடீட்சியா தலைவர் முருகன், செயலாளர் முருகானந்தம், வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயப்பிரகாசம், கவுரவச் செயலாளர் வேல்சங்கர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை