உள்ளிருப்பு போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உள்ளிருப்பு போராட்டம்

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

-----மதுரை, காலமுறை சம்பளம் வழங்ககோரி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கிராமப்புற மேல்நிலைத்தொட்டி இயக்குவோர், துப்புரவு வேலை செய்வோர் நலச்சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில பொதுச்செயலர் செல்வம் தலைமை வகிக்க, தலைவர் சேது, பொருளாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்க, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முருகன் துவக்கினார். ஊரக வளர்ச்சித்துறை நிர்வாகிகள் அழகுப்பாண்டி, பாலாஜி, சத்துணவு பணியாளர் சங்க செயலர் சோலையன் பேசினர்.
மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச சம்பளம் 18 ஆயிரம் ரூபாயை மாநில அரசு வழங்க வேண்டும். ஊராட்சியில் 10, 20, 30 ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் பணிக்கொடை வழங்க வேண்டும். விபத்தில் சிக்குவோர் குடும்ப உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆலோசகர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். பின் கலெக்டர் வீரராகவராவ்விடம் மனு அளித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை