குரங்கணி தீ விபத்து ஆறுதல் கூற தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குரங்கணி தீ விபத்து ஆறுதல் கூற தடை

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை,
குரங்கணி தீ விபத்தில் சிக்கி மதுரையில் சிகிச்சை பெறுவோருக்கு தொற்றுநோய் ஏற்படாமல் தடுக்க பார்வையாளர்களுக்கு டீன் மருதுபாண்டியன் தடை விதித்துள்ளார்.
தீ விபத்தில் காயமுற்ற சேலம் தேவி, 29, ஈரோடு கண்ணன், 26, சென்னை அனுவித்யா, 26, திருப்பூர் சிவசங்கரி,26, சிகிச்சை பெறுகின்றனர்.
இவர்களுக்கு ஆறுதல் கூற கட்சியினர் காலணியுடன் முகமூடி, கை உறை அணியாமல் வார்டிற்குள் வருவதால் நோய் தொற்று ஏற்படும்.
எனவே கட்சியினர் வருவதற்கு தடை
விதிக்கவேண்டும் என்ற
உறவினரின் கருத்து நேற்று தினமலர்
நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக, ஆறுதல் கூற வருவோருக்கு தடை விதித்து டீன் நோட்டீஸ் ஒட்டியுள்ளார். அவர் அனுமதியின்றி யாரையும் அனுமதிக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே காயம்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நோக்கில் 'டிஸ்சார்ஜ்' ஆவதாக தகவல் வெளியானது.
கலெக்டர் வீரராகவ ராவ் கூறுகையில், ''அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை தருகிறோம். பெற்றோர் விருப்பபடியே காயமுற்றோரை தனியார் மருத்துவமனை அழைத்து செல்கின்றனர். அங்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்கிறோம்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை