சிவன் கோயில்களில் பிரதோஷ விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிவன் கோயில்களில் பிரதோஷ விழா

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சாயல்குடி:சாயல்குடியில் உள்ள ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட கைலாசநாதர் சமேத மீனாட்சியம்மன் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜைகளை ரவிச்சந்திர குருக்கள் நடத்தினார்.
* மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிற வள்ளியம்மன் கோயிலில் நடந்த பிரதோஷ விழாவில் மூலவருக்கும், நந்திக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர்.
* சிக்கல் அருகே மேலக்கிடாரம் திருவனந்தீஸ்வரமுடையார் சமேத சிவகாமியம்மன் கோயிலில் நந்திக்கும், மூலவருக்கும் 18 வகையான அபிஷேகம் செய்யப்படது.
பெண்கள் நெய்விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பூஜைகளை செந்தில்குமார் செய்தார். ஏற்பாடுகளை பிரதோஷக்குழுவினர் செய்திருந்தனர்.
* உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் மூலவர் மற்றும் பிரதோஷ நந்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* கீழக்கரை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. மாலையில் உற்ஸவர் வீதியுலா புறப்பாடு நடந்தது.ஏற்பாடுகளை மாதாதந்திர பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்.
* ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் உள்ள சிவலிங்கத்திற்கு பிரதோஷ விழா நடந்தது. ஏற்பாடுகளை ஐயப்பா சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை