மண்டபம் அருகே மீன் வளர்ப்பு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மண்டபம் அருகே மீன் வளர்ப்பு பயிற்சி

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் மண்டபம் அருகே மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் அலங்கார மீன்கள் வளர்ப்பு குறித்து பயிற்சி முகாம் நடந்தது.தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகத்தின் மண்டபம் அருகே சீனியப்பா தர்காவில் உள்ள வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு ஆராய்ச்சி நிலையத்தில், கடல் அலங்கார மீன்கள், உணவுக்கான மீன் குஞ்சுகள் விற்கப் படுகிறது.
மீன்வளர்ப்பில் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் செயல்முறை விளக்கம் குறித்து இங்கு பயிற்சி முகாம் நடந்தது. முகாமில் பங்கேற்ற 50 பேருக்கும் மீன் குஞ்சுகள் வளர்ப்பது குறித்து விளக்கினர்.முகாமில் மீன்வள பல்கலைகழக துணைவேந்தர் பெலிக்ஸ், தேசிய மீன்வள அபிவிருத்தி வாரிய செயல் தலைவர் ராணிகுமுதினி சிறப்புரையாற்றினர். முகாமை சீனியப்பா தர்கா ஆராய்ச்சி மைய இயக்குனர் ஸ்டீபன் சம்பத் குமார், மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி நாசர், ராமநாதபுரம் மீன்துறை இணை இயக்குனர் ஐசக்ஜெயகுமார் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X