விழிப்புணர்வு பேரணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு பேரணி

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, மார்ச் 15--
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து நிறுத்தக்கோரி, சமூகநலத்துறை சார்பில் சென்னையில் துவங்கிய விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணிக்கு மதுரை சமூக அறிவியல் கல்லுாரியில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
கலெக்டர் வீரராகவராவ் துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், ''பெண்கள் மன தைரியத்துடன் எந்தவொரு செயலையும் மேற்கொள்ள வேண்டும். இக்கட்டான நிலையில் தங்களை பாதுகாத்து கொள்ள ஒரு தற்காப்பு கலையை பழகிட வேண்டும்,''
என்றார். நகரின் பல்வேறு பகுதிகளில் பேரணி
நடந்தது.
சமூக நல அலுவலர் சாந்தி, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் பன்னீர்செல்வம், கல்லுாரி தலைவர் ராஜா, செயலர் தர்மசிங் மற்றும் பலர் பங்கேற்றனர். இன்று
இப்பேரணி தேனி
செல்கிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை