ஆதிதிராவிடர் கல்லூரி விடுதியில் நள்ளிரவில் அரிசி கடத்தல் பீதியில் மாணவிகள் தவிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆதிதிராவிடர் கல்லூரி விடுதியில் நள்ளிரவில் அரிசி கடத்தல் பீதியில் மாணவிகள் தவிப்பு

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம்:ஆதிராவிடர் கல்லுாரி மாணவியர் விடுதியில் நள்ளிரவில் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்களால் மாணவிகள் அச்சத்தில் தவிக்கின்றனர்.
ராமநாதபுரம் 'டி' பிளாக் அருகே அரசு ஆதிதிராவிடர் கல்லுாரி விடுதி உள்ளது. இங்கு, 60 மாணவிகள் தங்கி, அரசு கல்லுாரிகளில் படிக்கின்றனர். காலையில், லெமன் சாதம், கடலை துவையல் கொடுக்கின்றனர். மதியம் சாதம், சாம்பார், இரவு சாதம், புளிக்குழம்பு அல்லது ரசம் கொடுக்கின்றனர். புதன்கிழமை மட்டும் சிக்கன் குழம்பு உண்டு.
விடுதியில் இருந்து இரவு 12:00 மணி, காலை 3:00 மணி, 5:00 மணி, என அரிசி கடத்தப்படுகிறது.வெளியில், டூவீலரை நிறுத்திவிட்டு விடுதிக்குள் நுழையும் நபர்கள் மாணவிகள் விடுதி என்ற சிந்தனை சிறிதுமின்றி செல்கின்றனர். காவலாளி துணையுடன் அரிசியை வேறு மூடையில் மாற்றி கட்டி தலைச்சுமையாக துாக்கிச் செல்கின்றனர்.
இதுகுறித்து புகார்கள் எழுந்ததையடுத்து ஆர்.டி.ஓ. சுமன் விடுதியில் ஆய்வு நடத்தினார். ஆய்வில், அரிசி இருப்பு குறைந்தது. இதையடுத்து விடுதி அலுவலர்கள் எச்சரிக்கப்பட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை