ஒருங்கிணைந்த பண்ணையம் விவசாயிகளுக்கு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒருங்கிணைந்த பண்ணையம் விவசாயிகளுக்கு பயிற்சி

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம்:மண்டபம் வட்டாரம், இரட்டையூரணி விவசாயிகளுக்கு, ராமநாதபுரம் கடலோர உவர் ஆராய்ச்சி மையத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் திட்டத்தில்,ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண்மை உதவி இயக்குனர் குப்புசாமி தலைமை வகித்தார். ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் பேராசிரியர் சாத்தையா, பயிர் சாகுபடியுடன் இணைந்து காளான் வளர்ப்பு, ஆடு, கோழி வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல், தேனீ வளர்ப்பு தொழில் நுட்பங்களை விளக்கினார்.
கால்நடை உதவி இயக்குனர்கள் டாக்டர் வீரமணிகண்டன், கால்நடை டாக்டர் முகமது நிஜாமுதீன் கால்நடை வளர்ப்பு பயிற்சியளித்தனர். உதவி பேராசிரியர் ராம்குமார் மண்புழு உரம் தயாரிப்பது குறித்தும், உச்சிப்புளி வேளாண்மை அலுவலர் கீதாஞ்சலி ஒருங்கிணைந்த பண்ணையத்தின் நன்மைகள் குறித்தும் விளக்கினர். துணை வேளாண்மை அலுவலர் பாண்டியன் நன்றி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை