சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 7 ஆண்டு சிறை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 7 ஆண்டு சிறை

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம்:சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 41 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மகிளா கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பாம்பூர் பகுதியில் உள்ள 9 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த குருவையா மகன் வேல்சாமி,38, மிட்டாய் வாங்கி தருவதாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பரமக்குடி அனைத்து மகளிர் வேல்சாமியை கைது செய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் மகிளா கோர்ட்டில் நடந்தது.
மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.கயல்விழி, போஸ்கோ சட்டம் பிரிவு 10 ன் படி, பாலியல் தாக்குதலுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 36 ஆயிரம் ரூபாய் அபராதம், பிரிவு 12, பாலியல் தொந்தரவு செய்ததற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.
தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் 40 ஆயிரம் ரூபாய் பாதிக்கப்பட்ட குழந்தையின் படிப்பு செலவிற்கும், ஆயிரம் ரூபாய் அரசுக்கும் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை