கடல் உணவு பூங்காவில் தொழில் துவங்க விண்ணப்பிக்கலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடல் உணவு பூங்காவில் தொழில் துவங்க விண்ணப்பிக்கலாம்

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் அமையவுள்ள 'கடல் உணவு பூங்கா'தொழிற்பேட்டையில் தொழில் துவங்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், என கலெக்டர் நடராஜன் அறிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பது:ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை ஊராட்சி யில், கிழக்கு கடற்கரை சாலையில்குடிசைமாற்று வாரிய குடியிருப்பு அருகே தமிழ்நாடு சிட்கோ சார்பில்,ஒருங்கிணைந்த கடல் உணவு பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு மீன் பதப்படுத்தி ஏற்றுமதி செய்வோர், மீன் எண்ணெய், மீன் உணவு, நண்டு, இறால் ஏற்றுமதி உள்ளிட்ட கடல் உணவு சார்ந்த தொழில்களை துவங்கலாம். ஏக்கருக்கு 23 லட்சம் ரூபாய் நிலத்திற்கான தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆர்வம் உள்ள தொழில் முனைவோர், தொழில் பூங்காவில் இட ஒதுக்கீடு பெற பெயர் மற்றும் முகவரியுடன் (மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எண்), தொடங்க இருக்கும் தொழில் விவரம், தேவைப்படும் இடத்தின் அளவு(சென்டில்), மற்றும் நிலம் வாங்கும் வகை, வெளிச்சந்தை விற்பனை முறை, அல்லது குத்தகை ஆகிய விவரங்களுடன், பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கலெக்டர் அலுவலக வளாகம், ராமநாதபுரம், என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X