வீட்டு வாடகைப்படியை மாற்றியமைக்க வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டு வாடகைப்படியை மாற்றியமைக்க வலியுறுத்தல்

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகங்கை:சிவகங்கையில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு வீட்டு வாடகைப்படியில் ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுவதை மாற்றியமைக்க தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.அக்கூட்டணி மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சிவகங்கையில் நடந்தது. மாவட்டத் தலைவர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜோசப் சேவியர் பேசியதாவது: 8 வது ஊதிய மாற்றக்குழுவில் வீட்டு வாடகைப்படி கணக்கீட்டில் மாவட்டத் தலைநகரான சிவகங்கை கிரேடு 2 வில் இருந்து கிரேடு 3 க்கு மாற்றப்பட்டது. இதனால் சிவகங்கையில் பணிபுரியும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே இருந்தபடி கிரேடு 2 வுக்கு சிவகங்கையை மாற்ற வேண்டும்.திருப்புத்துார், சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றியங்கள் அட்டவணைப்படுத்தாத இடங்களுக்கான வீட்டு வாடகைப்படியில் சேர்க்கப்பட்டன. இதனால் அங்கு பணிபுரிவோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை மாற்றியமைக்க வேண்டும்.ஆசிரியர்கள் வருங்கால வைப்பு நிதியின் கணக்குச் சீட்டில் 2015-16, 2016-17 ல் விடுதல்கள் உள்ளன. பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால் கணக்குச்சீட்டு இருப்பு விபரம் அறிய முடியாமல் தவிக்கின்றனர். உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்கள் நலநிதி கணக்கு விபரங்களை மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து சரிசெய்து கொடுக்க வேண்டும், என்றார். மாவட்டப் பொருளாளர் பொன்னுச்சாமி நன்றி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை