தாம்பரம்- - செங்கோட்டை பகல் ரயில் நீடிக்குமா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாம்பரம்- - செங்கோட்டை பகல் ரயில் நீடிக்குமா

Added : மார் 15, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகங்கை:சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை பகல் நேர ரயில் திங்கள், புதன் கிழமைகளிலும், மறுமார்க்கத்தில் செவ்வாய், வியாழக்கிழமைகளிலும் இயக்கப்பட்டு வருகிறது.இந்த ரயில் இப்பகுதியில் காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய நகரங்களில் நின்று செல்கிறது. ஆனால் சிவகங்கையில் நிற்பதில்லை. இதனால் சிவகங்கை மக்கள் மானாமதுரைக்கோ, காரைக்குடிக்கோ சென்று, அங்கிருந்து தான் சென்னை செல்ல வேண்டியுள்ளது.சோதனை ஓட்டமாக இன்று வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் போக்குவரத்தை தொடர செய்வதற்கு சிவகங்கை தொகுதி எம்.பி., செந்தில்நாதன் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Hariharan - Hyderabad,இந்தியா
15-மார்-201812:19:01 IST Report Abuse
R Hariharan இதனை தினசரி தொடங்க்க வேண்டும். மேலும் சிலம்பு எக்ஸ்பிரஸ் தினசரி தேவை. காரைக்குடி கொல்லம் பயணிகள் ரயில் தொடங்க்க வேண்டும். கொல்லம் சென்னை விருதுநகர், மதுரை வழில விட வேண்டும். பழைய கொல்லம் மெயில் கொல்லம் எக்ஸ்பிரஸ் கொல்லம் நாகப்பட்டினம் ரயில் சேவை மீண்டும் தொடங்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை