நாளை 10ம் வகுப்பு தேர்வு 18,969 பேர் பங்கேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாளை 10ம் வகுப்பு தேர்வு 18,969 பேர் பங்கேற்பு

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் நாளை (மார்ச் 16) துவங்கும் 10 ம் வகுப்பு தேர்வை 18 ஆயிரத்து 969 மாணவர்கள் எழுதுகின்றனர்.தற்போது பிளஸ் 2, பிளஸ் 1 தேர்வுகள் நடந்து வருகின்றன. தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு நாளை துவங்கி, ஏப்., 20 வரை நடக்கிறது. இத்தேர்வை சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 39 தேர்வு மையங்களில் 3 ஆயிரத்து 981 மாணவர்கள், 4 ஆயிரத்து 182 மாணவிகள் என, 8 ஆயிரத்து 163 பேர் எழுதுகின்றனர். அதேபோல் தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் 50 மையங்களில் 5 ஆயிரத்து 492 மாணவர்கள், 5 ஆயிரத்து 314 மாணவிகள் என, 10 ஆயிரத்து 806 பேர் எழுதுகின்றனர்.சிவகங்கை வருவாய் மாவட்ட அளவில் 89 மையங்களில் 9 ஆயிரத்து 473 மாணவர்கள், 9 ஆயிரத்து 496 மாணவிகள் என, 18 ஆயிரத்து 969 பேர் எழுதுகின்றனர். முதன்மைக் கல்வி அலுவலர், சிவகங்கை, தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் தலைமையில் 95 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை