வழக்கில்லை சான்று கேட்கும் துபாய் அரசு எஸ்.பி., அலுவலகத்தில் குவியும் மனுக்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வழக்கில்லை சான்று கேட்கும் துபாய் அரசு எஸ்.பி., அலுவலகத்தில் குவியும் மனுக்கள்

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சிவகங்கை:துபாயில் பணியாற்றுவோர், சொந்த நாட்டில் தங்கள் மீது வழக்கு இல்லை என சான்று வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால், ஏராளமானோர் எஸ்.பி., அலுவலகத்திற்கு தினமும் படையெடுக்கின்றனர்.
வெளிநாட்டு தொழிலாளர்கள், தங்கள் மீது சொந்த நாடுகளில் எந்த வழக்கும் இல்லை என போலீசில் தடையின்மை சான்று வழங்க வேண்டும் என கடந்த பிப்.4ல் துபாய் அரசு உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் அங்கு பணியாற்றுகின்றனர்.இதனால், அங்கு வேலை செய்பவர்களின் பெற்றோர்களும், விசா பெற்று விமான டிக்கெட் முன்பதிவு செய்துள்ளவர்களும் போலீஸ் தடையில்லா சான்று பெற தினமும் சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.இவர்கள் விண்ணப்ப மனுவுடன், ரேஷன்கார்டு, ஆதார் கார்டு நகல்கள், பாஸ்போர்ட் நகல் ஆகியவற்றுடன் ரூ.1000 கட்டணம் செலுத்தி எஸ்.பி., அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.தங்கள் வீடுகளின் அருகில் உள்ள காவல் நிலையங்களில் தங்கள் மீது வழக்கு இல்லை என்ற அறிக்கை பெற்று, மனுவுடன் இணைக்க வேண்டும். இச்சான்றிதழ் கேட்டு தினமும் 70 வரை எஸ்.பி., அலுவலகத்தில் மனுக்கொடுக்கின்றனர்.இவர்களுக்கு விரைவாக சான்றிதழ் வழங்குவதற்காக எஸ்.பி., ஜெயச்சந்திரன் 'சி.சி.டி.என்.எஸ்.,'( கிரைம் அண்டு கிரிமினல் டிராக்கிங் நெட் வொர்க் சிஸ்டம்) என்ற தனிக்குழுவை ஏற்படுத்தியுள்ளார். இக்குழுவினர் தனி விசாரணை நடத்தி வழக்குகள் இல்லை என உறுதியளித்த பின், 15 நாட்களுக்குள் எஸ்.பி., கையெழுத்துடன் தடையில்லா சான்று வழங்கப்படும். கடந்த பிப்., 12 முதல் இதுவரை 900 பேர்களுக்கு இச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X