Finland is the happiest country in the world, says UN report | உலகின் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து: 133 வது இடத்தில் இந்தியா | Dinamalar

உலகின் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து: 133 வது இடத்தில் இந்தியா

Added : மார் 15, 2018 | கருத்துகள் (40)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
happiest country Finland,United Nations ,UNSDSN, உலகின் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து,  ஐ.நா. அமைப்பு, யு.என்.எஸ்.டி. எஸ். என் ,  ஊழல் ஒழிப்பு, சமூக விடுதலை, பணப்புழக்கம் , 133 வது இடத்தில் இந்தியா, அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு, 
The happiest country in the world is Finland ,   corruption, social liberation, cash flow, 133rd Place in India,

புதுடெல்லி: ஐ.நா. அமைப்பு ஒன்று உலகின் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடு பின்லாந்து என தெரியவந்துள்ளது. குறித்து நடத்திய ஆய்வில் இந்தியாவுக்கு 133-வது இடம் கிடைத்துள்ளது.

ஐ.நா.வுக்கான நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு (யு.என்.எஸ்.டி. எஸ். என் ) என்ற அமைப்பு 2018ஆம் ஆண்டின் உலகின் மகிழ்ச்சியான நாடு எது என்ற ஒரு ஆய்வை ஆன்லை வாயிலாக கடந்த சிலமாதங்களாக நடத்தி வந்தது. அதன் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஆய்வறிக்கையில்கூறப்பட்டுள்ளதாவது:

உலகம் முழுவதும் 156 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டதில் பின்லாந்து என்ற நாட்டில் தான் உலகிலேயே அதிக மகிழ்ச்சியாக வாழும் மக்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்லாந்தை தொடர்ந்து நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன. அமெரிக்கா 18-வது இடத்திலும் இந்தியா 133-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 122வது இடத்தில் இருந்த நிலையில்இந்தாண்டு 11 இடங்கள் பின்தங்கியுள்ளது. ஊழல் ஒழிப்பு, சமூக விடுதலை, பணப்புழக்கம் ஆகியவைகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponn - madurai,இந்தியா
16-மார்-201808:41:33 IST Report Abuse
ponn மிக சிறந்த கல்வி முறையை பின்லாந்து கொண்டுள்ளது. கல்வி அனைவர்க்கும் இலவசம். முக்கியமாக கல்வியை அரசாங்கம் மட்டுமே நடத்துகிறது. இங்கு கல்வி வியாபாரமாகிவிட்டது. பின்லாந்தில் ஏழை பணக்காரராற் எல்லோருக்கும் கல்வி பொது . குழந்தையின் வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் சேர்க்kaனும். பரிச்சையே இல்லாத கல்வி முறை. பின் ஏன் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கமாட்டார்கள் ........
Rate this:
Share this comment
Cancel
Rajinikanth - Chennai,இந்தியா
15-மார்-201817:05:19 IST Report Abuse
Rajinikanth ஊழல் அரசியல் வியாதிகளை ஒழித்து விட்டாலே உலகின் முதல் மகிழ்ச்சியான நாடாகிவிடும் இந்தியா...... 2G வழக்கில் ராசா விடுதலை ...டெலிபோன் இணைப்பு வழக்கில் மாறன் விடுதலை ..இன்னும் கார்த்தி சிதம்பரம் கூட விடுதலை ஆகிவிட நீதிபதிகளின் கடாட்சம் இருக்கிறது ..மல்லையா நீரவ் மோடி என கொள்ளைக்காரர்களின் பட்டியல் நீளுகிறது ...காவிரி கதை சிந்துபாத் கதை போல நீளுகிறது ...எங்கே மகிழ்ச்சியாக இருப்பது ...?
Rate this:
Share this comment
Cancel
Tamil - Bangalore,இந்தியா
15-மார்-201817:01:19 IST Report Abuse
Tamil Everyone wants to become rich than other one, then how we will be happy.
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
15-மார்-201816:11:57 IST Report Abuse
dandy பிழை .... சாராயம் குடித்து விட்டு வேஷ்ட்டி அவிழ. ..விழுந்து கிடைக்கும் மகிழ்ச்சி டாஸ்மாக் நாடடை மிஞ்சமுடியாது உலகில் ..சாராயத்தை பாக்கெட்டில் அடைத்து மக்களை குடிகாரர்களாக்கி ..செல்வம் சேர்த்த மஞ்சள் துண்டு குடும்பம் தான் உலகில் மிகவும் மகிழ்ச்சியான குடும்பம்
Rate this:
Share this comment
Cancel
15-மார்-201815:58:43 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ஆன்லைன் மூலமாக நடத்தினார்களாம். யார் ஓட்டுப்போட்டது என்று தெரியவில்லை. திமமும் பத்திரிகை , சமூக வலைதளத்தில் உள்ள நமக்கு கூட தெரியாது. இதெல்லாம் ஏமாற்று வேலை, இவர்களே ஓட்டுப்போட்டு இவர்களே அறிக்கை கொடுப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
15-மார்-201815:11:16 IST Report Abuse
த.இராஜகுமார் இந்தியா வளர்கிறது.. பக்கத்ஸ்களுக்கு சமர்ப்பணம்.. நாட்டு மக்களின் பணத்தினை பிடுங்கி பணக்கார முதலைகளிடம் கொடுக்கும் மத்திய அரசிற்கு நல்ல பாடம். 2019 நாடாளுமன்ற தேர்தலின் தீர்ப்பு நன்றாக அமைய இறைவனை வணங்குவோம்...
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
15-மார்-201815:02:17 IST Report Abuse
Rafi இந்த ஆச்சியாளர்கள் மக்களை பதற்றத்தில் வைத்திருப்பதையே இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மகிழ்ச்சி இல்லாத வளர்ச்சி அதுவும் பொய் கோஷம் என்பதும் புலப்படுகின்றது.
Rate this:
Share this comment
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
15-மார்-201814:35:47 IST Report Abuse
ஆனந்த் பணம் என்று வந்துவிட்டபிறகு இந்தியாவில் எது மகிழ்ச்சி ...
Rate this:
Share this comment
Cancel
சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
15-மார்-201814:19:32 IST Report Abuse
சொல்லின் செல்வன் ஓ.. இந்தியா இந்த லிஸ்ட் ல இருக்கா
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
15-மார்-201814:00:12 IST Report Abuse
sundaram எல்லாருக்கும் வங்கியில் கடன் வாங்கி ஏப்பம் விட சந்தர்ப்பம் கொடுத்தா எல்லாரும் ஐரோப்பிய நாடுகள் ல போயி செட்டில் ஆகி சந்தோசமா இருக்கலாம். கொடுக்க மாட்டேங்குறாங்களே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை