வறட்சி மாவட்டமாக அறிவிக்க கம்யூ. மாநாட்டில் தீர்மானம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வறட்சி மாவட்டமாக அறிவிக்க கம்யூ. மாநாட்டில் தீர்மானம்

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மானாமதுரை:மானாமதுரையில் நடந்த இந்திய கம்யூ.,23 வது மாவட்ட மாநாட்டில் சிவகங்கையை வறட்சிமாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டு கொடியை சேதுராமன் ஏற்றி வைத்தார். சாத்தையா அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.மாவட்டச் செயலாளர் குணசேகரன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். வரவேற்பு குழுத்தலைவர் தங்கமணி,மாநிலக்குழு உறுப்பினர் முத்தையா உள்பட 300 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மாநாட்டில் கோடை துவங்கும் முன்பே மக்கள் குடிநீருக்கு அலையும் நிலை உள்ளது. எனவே சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய மாவட்டச் செயலாளராக கண்ணகியும்,86 பேர் கொண்ட மாவட்ட குழுவும் தேர்வு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை