கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை பயிர் இன்சூரன்ஸ் கிடைக்காததால் போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை பயிர் இன்சூரன்ஸ் கிடைக்காததால் போராட்டம்

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகங்கை:சூராணம் பகுதியில் 400 பேருக்கு பயிர் இன்சூரன்ஸ் வராததால் சிவகங்கை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
இளையான்குடி அருகே சூராணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆக்கவயல், உதயனுார், சூராணம் குரூப் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கம் மூலம் போலி அடங்கல் மற்றும் இறந்தோரின் பெயரில் கடன் வழங்கியதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தனர். இதுகுறித்த புகாரில் சங்க செயலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.மேலும் அச்சங்கத்தில் 2016-17 ல் 962 பேர் பயிர் இன்சூரன்ஸ் செய்தனர். முறைகேடு குறித்த விசாரணை நடந்ததால், முதற்கட்டமாக 562 பேருக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டன. 400 பேருக்கு வழங்கவில்லை. இதையடுத்து விடுபட்டோருக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும், மோசடி செய்த ஊழியர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும், மோசடி செய்த பணத்தை கூட்டுறவு சங்கத்தில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வலியுறுத்தி சூராணம் பகுதி விவசாயிகள் நேற்று சிவகங்கை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஜான்பாஸ்கோ கூறியதாவது: 562 பேருக்கு இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்கியதாக கூறுகின்றனர். அதிலும் பாதி பேருக்கு மட்டுமே பணம் வந்துள்ளது. 400 பேருக்கான இழப்பீடு குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. மோசடி ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X