துணிச்சலாக முடிவெடுங்கள்! பழனிசாமிக்கு ஸ்டாலின் யோசனை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
துணிச்சலாக முடிவெடுங்கள்!
பழனிசாமிக்கு ஸ்டாலின் யோசனை

சென்னை, 'காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என்ற, உளப்பூர்வ எண்ணம், முதல்வருக்கு இருந்தால், பா.ஜ., அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க, துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

துணிச்சலாக ,முடிவெடுங்கள்!, பழனிசாமிக்கு, ஸ்டாலின், யோசனை


அவரது அறிக்கை:ஆந்திர மாநிலத்திற்கு, சிறப்பு அந்தஸ்து வழங்கி, அதற்கான நிதி ஒதுக்க, மத்திய, பா.ஜ., அரசு மறுத்து விட்டது. வரவேற்கிறதுஆந்திர மாநில உரிமையை நிலை நாட்ட, அம்மாநில முதல்வர், சந்திரபாபு நாயுடு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி விட்டார். அவரது முடிவை, மாநில சுயாட்சிக்காக போராடும் தி.மு.க., வரவேற்கிறது.


நெருக்கடியான இந்த நிலை, தமிழகத்திற்கும் பொருந்தும். 'நீட்' தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என, தமிழக சட்டசபையில் நிறை வேற்றப்பட்ட, இரு மசோதாக்களுக்கு, ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறாமல், சட்ட மன்ற மாண்பையும், தமிழ் மக்களின்

உணர்வுகளையும், மத்திய, பா.ஜ., அரசு அவமதித்துள்ளது.உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, ஆறு வாரத்திற்குள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.


அதை நிறைவேற்றாமல், கர்நாடக அரசை சீராய்வு மனு தாக்கல் செய்ய தூண்டிவிடும் செயலை, மத்திய அரசுசெய்கிறது.தமிழகத்தின் அனைத்து கட்சி தலைவர்களையும் பிரதமர் சந்திக்கவில்லை; முதல்வரையும் சந்திக்கவில்லை.காவிரி உரிமையை காலில் போட்டு மிதித்துள்ள, பா.ஜ., அரசுக்கு அழுத்தம் கொடுக்க, கடைசி வாய்ப்பாக, தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வரும், நம்பிக்கையில்லா தீர்மானம் அமைந்துள்ளது.


காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என, உண்மையிலேயே உளப்பூர்வ எண்ணம், முதல்வருக்கு இருந்தால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க, துணிச்சலான முடி வு எடுத்து, உடனடியாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


திராவிட நாடு:ஸ்டாலின்ஈரோட்டில், பத்திரிகையாளர்கள், 'தென் மாநிலங் கள் ஒன்றிணைந்து, திராவிட நாடு கொள்கையை கொண்டு வருவது போல, ஒரு தோற்றம் வந்து இருக்கிறதே' என, கேட்டனர்.அதற்கு பதில் அளித்த போது, 'அப்படியொரு சூழ்நிலை வந்தால் வரவேற் போம்' என்றேன்.திராவிட நாடு கோரிக்கையை, அண்ணாதுரை கைவிட்டபோது, 'கொள்கையை கைவிட்டு இருக்கிறோமே தவிர, அதற்கான

Advertisement

காரண, காரியங்கள்அப்படியே இருக்கின்றன' என, தெளிவாக கூறினார்.


அவர் சொன்னது, நூற்றுக்கு நூறு உண்மை என்பது, இப்போது தெரிகிறது. தென் மாநிலங் கள் அனைத்தும், பா.ஜ.,வால் எப்படியெல்லாம், புறக்கணிக்கப்படுகின்றன என்பதை பார்க்கிறோம்.இவ்வாறு நான் கூறியதை, நான் திராவிட நாடு கேட்டது போலவும், அதற்காக, நாங்கள் குரல் கொடுப்பது போலவும், அதை ஆதரிப்பது போலவும், தொலைக்காட்சிகள், தங்களுடைய விளம்பரத்துக்காக, மிகப் பெரிய பிரசாரத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன.


காவிரி மேலாண்மை வாரியம் அமைய, எம்.பி.,க்கள் மட்டுமின்றி, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், கூண்டோடுராஜினாமா செய்யவேண்டும்.அதை முன்னெடுக்க, அரசு முன்வர வேண்டும். அப்படியொரு நடவடிக்கை எடுக்கும்போது, எதிர்க்கட்சியாக இருக்கிற தி.மு.க., அதை பின்தொடர தயாராக இருக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.Elumalai - Chennai,இந்தியா
18-மார்-201816:11:02 IST Report Abuse

C.Elumalaiஸ்டாலினுக்கு,காங் திமுக மத்தியில் ஆண்டபோது, தமிழகத்திற்கு செய்த நல்லவைகளில், ஏதேனும் ஒன்றை கூறமுடியுமா ஸ்டாலின். தமிழக விவசாயிகளை வேறு வேலை பாருங்கள், என்றுகூறியவர், உங்க மன்மோகன்சிங். சர்க்கரை, அரிசி, மண்எண்ணை, குறைத்து ரேஷன் வாங்கும் மக்களை, அலைக்கழித்த மத்தியரசு உங்களது தானே. வாய்நீட்டிமுழக்கமிடும் நீங்கள்,அன்று வாய்,காது, கண், இல்லாமல் இருந்தீர்களோ.

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-மார்-201816:37:10 IST Report Abuse

Nallavan Nallavanசுமார் இருபதாண்டுகளாக மத்தியில் இந்தக் கட்சியின் அல்லது எந்தக் கூட்டணியின் அரசு அமைந்தாலும் திமுக அதில் போய் ஒட்டிக்கொண்டு தமிழர்களுக்காக உழைத்து உழைத்து மாய்ந்து போயுள்ளது நண்பரே ........

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-மார்-201814:19:13 IST Report Abuse

Nallavan Nallavan"""" இந்தப் பிரச்னைக்கே காரணம் யார் """" என்று தமிழன் சிந்தித்தால் என்னவாகும் ??

Rate this:
Manian - Chennai,இந்தியா
18-மார்-201821:59:45 IST Report Abuse

Manianசுமார் 20 % மேல்தட்டு, மத்திய நடுத்தர நகர மக்கள் சிந்திப்பது போல, படிக்காத கிராமவாசிகள் ஓட்டை விற்கும்போது நினைப்பார்களா?...

Rate this:
அரபி அடிமை - Chennai,இந்தியா
18-மார்-201813:18:59 IST Report Abuse

அரபி அடிமைசுடலை நாங்க இந்தியர்கள்.. நீ வேணும்னா இலங்கை போ ..

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
18-மார்-201811:12:37 IST Report Abuse

Kuppuswamykesavan///Kabilan E - Chennai,இந்தியா 18-மார்-2018 01:09 இந்த மாதிரி வீரமான யோசனை எல்லாம் நீங்கள் ஆட்சி செய்யும் போது ஏன் வரல.../// - அட அடுத்தவங்களுக்கு வந்தா, அது தக்காளி சாறுங்க, அவங்களுக்கு வந்தா .........., நீங்களே சொல்லுங்க.

Rate this:
Gopalakrishnan - Kuzhumani,இந்தியா
18-மார்-201809:23:15 IST Report Abuse

Gopalakrishnanமக்கள் சொத்தை கொள்ளை அடித்து வைத்து கொண்டு என்னவா சவுண்ட் உடறார்கள்...கொள்ளைக்கார பயலுவ ...

Rate this:
Gopalakrishnan - Kuzhumani,இந்தியா
18-மார்-201809:13:27 IST Report Abuse

Gopalakrishnanதும்பி, அடைந்தால் திராவிட நாடு இல்லாவிடில் சுடுகாடு என்று முழங்கிய காலம் முடிந்தது ...நம்பால் முடிந்தது போதும் போதும் என்று அளவிற்கு மக்களை ஏமாற்றி பசப்புமொழி பேசி முத்தமிழையும் வித்து தமிழ் இனத்தை கொன்று சொத்து சேர்த்துதான் மிச்சம் ...அடுத்ததாக நேராக சுடுகாடுதான் ... தயாராகுக தானை தமிழனே ...மாணத்தமிழனே ... வீரத்தமிழனே.. சூரத்தமிழனே ...வீணாய்ப்போன விருட்டு தமிழனே ...நாசமா போன நாரதமிழனே ....பேசாமல் இருக்காதே பேர தமிழனே ...அடைந்தால் திராவிடநாடு என்று முழங்கியது சரியாக வரவில்லை ... ஆகவே இப்பொது முழங்குவோம் ...அடைத்தான் ஆதிதிராவிட நாடு ...இல்லையே இடுகாடு ....

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-மார்-201816:44:59 IST Report Abuse

Nallavan Nallavanசில வருடங்களுக்கு முன்னால் இலங்கை அமைச்சர் ஒருவர் கருணாநிதிக்கு எச்சரிக்கை விடுத்தார் """" கருணாநிதி முதலில் தனது நீண்டகால கோரிக்கையான தனித் திராவிட நாட்டை முதலில் அடையட்டும் ..... அதன் பிறகு அவர் தனி ஈழத்துக்காகப் போராடலாம் """" என்று கூறியபொழுது இங்கிருந்து மவுனமே அந்த இலங்கை அமைச்சருக்குப் பதிலாகக் கிடைத்தது ..... நமது திரா(விடக்) கட்சியினர் அட்டைக்கத்தி வீரர்கள் ........

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-மார்-201808:33:02 IST Report Abuse

Kasimani Baskaranதனி நாடு கேட்கும் இது போன்ற தேசவிரோதிகளை உள்ளே வைத்து நொங்கெடுக்க வேண்டும்... விஷம் பரவாமல் காப்பது நல்லது...

Rate this:
Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா
18-மார்-201812:21:02 IST Report Abuse

Matha, Jathi Saarpattra Thesapakthanசுதந்திரத்தை எதிர்த்த வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்த RSS யை உள்ளே விட்டதால் தான் நாடு முழுவதும் விஷம் பரவி சமூக நல்லிணக்கம், வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது...

Rate this:
Laxmanan Mohandoss - ambur,இந்தியா
18-மார்-201808:09:47 IST Report Abuse

Laxmanan MohandossHello Stalin what is your inner agenda,to become C.M. just you say C.M. should be bold.

Rate this:
Nagarajan Ks - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18-மார்-201807:47:34 IST Report Abuse

Nagarajan Ksஇவரோட அப்பா காவிரி நீருக்காக உருப்படியா ஒன்றும் செய்யவில்லை. இவர் ஏதோ டுமீல் விட்டுக்கொண்டிருக்கார். இழப்பு என்னவோ ADMK க்கு தானே. ஒன்றும் செய்ய தேவையில்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவில் நமக்கு சாதகமாக நிறைய உள்ளன. கோர்ட் மூலமாகவே எல்லாம் சாதிக்க முடியும். மத்திய அரசை நெருக்க முடியும். இந்த ஸ்டண்ட் வேலையெல்லாம் வேண்டாம்.

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-மார்-201807:20:02 IST Report Abuse

ஆரூர் ரங்இருக்கும் தென்னக மாநிலங்களுக்குள்ளேயே பல்லாண்டுகளாக முல்லைப் பெரியாறு காவிரி பாலாறு கோதாவரி கிருஷ்ணா காசரக்கோடு ஊட்டி தேவிகுளம் பீர்மேடு என எத்தனையோ வாய்க்கால் வரப்பு தகராறுகள் இதில் ஒற்றுமையாக திராவிட நாடு ஒரு கேடா ? ஒரு மொழி பேசுபவர்களை தனி இனம்போல சித்திரித்து (எந்த ஜெனெடிக் அறிவியலாளர் டுமீள தமிழன் தனியினம் என்று சொன்னார்?) அவர்களுக்குள் மொழி அடிப்படையில் மோதலை உண்டாக்கி அதில் பதவி சுகம் அனுபவிப்பதில் உங்கள் குடும்பம் தான் நாட்டுக்கே வழிகாட்டி

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement