India Advanced In 30 Years As Much As Britain Did In 150: Nobel Laureate Paul Krugman | இந்தியா 30 ஆண்டுகளில் அபார வளர்ச்சி : பொருளாதார நிபுணர் பால் க்ருக்மேன்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியா 30 ஆண்டுகளில் அபார வளர்ச்சி : பொருளாதார நிபுணர் பால் க்ருக்மேன்

Added : மார் 18, 2018 | கருத்துகள் (57)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
India economic Growth, UK Economic Growth ,Economist Paul Krugman, இந்தியா பொருளாதார வளர்ச்சி, பொருளாதார நிபுணர் பால் க்ருக்மேன், நோபல் பரிசு, ரைசிங் இந்தியா மாநாடு, பிரிட்டன்  பொருளாதார வளர்ச்சி, கட்டமைப்பு துறை, Nobel Prize, Rising India Conference,  Construction Department

புதுடில்லி : பிரிட்டன் 150 ஆண்டுகளில் அடைந்த பொருளாதார வளர்ச்சியை, இந்தியா 30 ஆண்டுகளிலே எட்டியுள்ளதாக, நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் பால் க்ருக்மேன் கூறியுள்ளார்..

தலைநகர் டில்லியில், தனியார் செய்தி சேனல் சார்பில் நடைபெற்ற ரைசிங் இந்தியா மாநாடு கருத்தரங்கில் பல்வேறு துறை நிபுணர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் பால் க்ருக்மேன் கூறியதாவது, பிரிட்டன் 150 ஆண்டுகளில் அடைந்த பொருளாதார வளர்ச்சியை, இந்தியா 30 ஆண்டுகளிலே எட்டியுள்ளது. இந்தியாவில், கடந்த 30 ஆண்டுகளில், பொருளாதார வளர்ச்சி அபரிமிதமான அளவில் உள்ளது. இருந்தபோதிலும், இந்தியாவில் நிலவிவரும் பொருளாதார சமநிலையற்ற தன்மை, மற்ற துறைகளின் வளர்ச்சிக்கு தடைக்கற்களாக அமைந்துவிடுகிறது.

இந்தியாவில், கட்டமைப்பு துறையில் பல பிரச்னைகள் இருந்தாலும், முந்தைய காலகட்டத்தைவிட தற்போது அது சிறப்பானதாகவே உள்ளதாக, அவர் மேலும் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
19-மார்-201802:19:37 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி நேதுதா சிங்கு தாத்தா எகனாமிக்ஸ் குளப்பாதூள இருக்குதுனு சொல்லீ வசீதாமா. ன்னிக்கீ ந்த தாத்தா பிரிட்டன் தா 150 இயர் ஆ குளாபாதூள இருகூதுனு சொல்லிவச்ருக்குதமா.
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
18-மார்-201819:24:01 IST Report Abuse
S.Baliah Seer கொள்ளையடித்து கோடிக்கணக்கில் சேர்த்தாலும் அவனுடைய வம்சத்திற்கு மிஞ்சுவதோ வறுமை தான். அந்த நிலைதான் தற்போது பிரிட்டனுக்கு. அங்கு தற்போது உழைப்பாளிகள் இல்லை.இந்தியாவில் எல்லா வளமும் இருந்தும் 90 சதவிகித மக்களின் உழைப்பில் 10 சதவிகிதத்திற்கும் குறைந்தவர்கள் மலையளவு வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்பதை பொருளாதார வளர்ச்சி என்கிறார் பால். இங்கு எல்லாப் பொருட்களும் கிடைக்கும்,வசதி படைத்தவர்களுக்கு. அதனால் அது பொருளாதார வளர்ச்சி ஆகுமா? வெஜிடபிள்ஸ், பழங்கள் போன்றவை சாதாரண மக்களுக்கு எட்டாக்கனி.ஆனால் பிரிட்டனில் எல்லோருக்கும் எல்லா பொருள்களையும் வாங்கும் தகுதி உண்டு. தான் வாங்கிய கூலிக்கு நன்றாகவே மாரடிக்கும் இவர் மலாலா போல் ஜில்லா போட்டு நோபல் பரிசு வாங்கியிருப்பார் போலும்.
Rate this:
Share this comment
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
18-மார்-201819:02:40 IST Report Abuse
Sridhar இந்தியாவின் பொருளாதார நிலைமைக்கு வெளிநாட்டவனின் சான்றிதழ் தேவையா? நம் கைப்புண்ணுக்கு கண்ணாடி போல? நம் நாட்டின் அவலநிலைமை தான் நமக்கு நன்றாக தெரியுமே? எதோ சமீபகாலமாக சிறுசிறு நடவடிக்கைகள் நம்பிக்கை தருவதாக இருந்தாலும், முன்பு இந்திய மக்களை வஞ்சித்த ஊழல் அரசியல்வாதிகளை உள்ளே தள்ளும் வரை நம் நாடு மலர்ச்சி காண முடியாது. ஏனென்றால் இந்திய மக்கள் பெரும்பாலும் குழந்தை மனமுடையவர்கள். வெகுளிகள். யாராவது உணர்ச்சிவசமாக பேசினால் உணமையென நம்பி செய்த மாபெரும் தவறுகளை மறந்து மன்னித்து அவர்களுக்கு உடனே வோட்டுப்போட்டு விடுவார்கள். கட்டு, லாலு சோனியா போன்றவர்கள் இன்றுவரை அரசியலில் இருப்பதற்கு இதுவே காரணம். தெருவில் போகும் எல்லோரையும் பிடித்து இழுத்து காயடித்த சஞ்சய் காந்திக்கே வோட்டுப் போட்டவர்களாயிற்றே. குஜராத்தில் பாருங்கள். முதல்தரமான ஆட்சியை கொடுத்த மோடிக்கு 49 சதவிகிதம் என்றால் கேடுகெட்ட ராவுல் கண்டிக்கு 42 சதவிகிதம் பேர் வாக்களித்திருக்கிறார்கள். பிஹாரில் கொள்ளை குடும்பமாக லாலு குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் இருக்கிறான். அந்த மக்களுக்கு அவன் மீது அனுதாபமாம் எங்கே பொய் முட்டிக்கொள்வது? அந்த கட்சி ஆள் இடைத்தேர்தலில் ஜெயித்து அந்த தொகுதியே பாகிஸ்தானுக்கு ஜிந்தாபாத் போடுது இப்படிப்பட்ட வெகுளி மக்கள் அங்கே என்றால், தமிழக மக்களோ வேறு மாதிரி. சிறு இரைக்கு தன் கற்பயே கொடுப்பது போல சின்ன பணத்திற்கு பெரிய வோட்டை போட்டுவிடுவார்கள். சினிமா மோகம் வேறு இந்த நிலையில், மோடி மாதிரி அறிவுபூர்வமாக சிந்தித்து நாட்டின் எதிர்காலத்தை வளமாக்க தொலைநோக்கு திட்டங்கள் தீட்டி அதலபாதாளத்தில் இருக்கும் நம் பொருளாதாரத்தை கொஞ்சமாவது சீர் செய்யலாம் என நடவடிக்கை எடுத்தால், அதில் ஆயிரத்து எட்டு குறைகள் கண்டு அவரையும் ஆப்படிக்க எத்தனிப்பார்கள். மோடியால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். மதப்பிரச்சாரம் செய்யவரும் அந்நியச்செலாவணி முறைகேடுகள் செய்யும் NGO களிலிருந்து மருந்து கம்பெனிகள் வரை பல சமூக விரோத சக்திகள் இந்த அரசால் பாதிக்க பட்டிருக்கின்றன. ஊழல் பணத்தில் பங்கு கிடைக்காத வருத்தத்தில் பல TV மற்றும் பத்திரிகைகள் இவர் எப்பொழுது ஆட்சியிலிருந்து விழுவார் நமக்கு எப்பொழுது மீண்டும் பழைய வசந்த காலம் வரும் என காத்துக்கொண்டிருக்கின்றன. அதற்காகவே தேச நலத்தையும் மீறி பல பொய்கதைகளையும் புனைசுருட்டுகளையும் பரப்பி வருகின்றன.நம் மக்கள் இவற்றை நம்பி மீண்டும் தீய சக்திகளுக்கு இடம் குடுக்க வாய்ப்புகள் அதிகம். அவ்வாறு நடக்காமல் இருந்தால் நாடு பிழைத்து மக்கள் செழிப்பாவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Somiah M - chennai,இந்தியா
18-மார்-201818:14:08 IST Report Abuse
Somiah M ஆப்பரேஷன் சக்சஸ் ஆகிவிட்டது ஆனால் ஆள்தான் பிழைப்பாரா என்று தெரியவில்லை என்கிறாரா ?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
18-மார்-201817:30:53 IST Report Abuse
Pugazh V @Nallavan Nallavan - 35 ஆவது முறை வளர்ச்சிப் பட்டியல் உங்களுக்காக: இந்த துறை மற்றும் நிறுவனங்களின் முழுப்பெயர்க கூகிளில் பார்த்து கொள்ளவும் ::: AIR, AI, BHEL, BPCL, BEML, CIL, CPT, DRDO, DAVP, FCI, GAIL, HPCL, HOC, HZL, ISRO, IOC, IA, IR, IN, IIMSC, MRL, MRPL, NTPC, NDA, OIL, ONGC, SAIL, ஆயிரக்கணக்கான கி.மீ. ரயில்வே, நூற்றுக்கணக்கான ஸ்டேஷன்ஸ், கல்வி நிலையங்கள், சாலைகள் , எல்லாமே கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவில் நிகழ்ந்த வளர்ச்சிகள். நான் பொருளாதார புலியா சிங்கமா தெரியாது. AU விலேயே, இந்திய பொருளாதாரம் பேப்பரில் நாலாவது, உலகப் பொருளாதார பேப்பரில் ஆறாவது ரேங்க் அடியேன். இன்னொன்று:: இப்போது ₹ ஒரு லட்சம் விலையுள்ள பொருளை வாங்க ₹ ஒரு லட்சத்து அறுபதாயிரத்து இருநூறு ரூபாய் தேவை. எப்படி ?? 1,42,000 சம்பாதித்தால் தான் 30% வருமான வரி போக கையில் ஒரு லட்சம் கிடைக்கும். மேலும் 18,000 ஜிஎஸ்டி வேண்டும். பொருளாதார சிங்கம் புலி கரடி யானைகள் கூட்டிப் பார்க்கவும் / 30 ஆண்டு களுக்கு முன்னால் இத1,60,200 ரூபாயா வேண்டும்??
Rate this:
Share this comment
கைப்புள்ள - nj,இந்தியா
18-மார்-201820:53:07 IST Report Abuse
கைப்புள்ளநாங்களும் உனக்கு 17000 முறையாக சொல்கிறோம். AIR, AI, BHEL, BPCL, BEML, CIL, CPT, DRDO, DAVP, FCI, GAIL, HPCL, HOC, HZL, ISRO, IOC, IA, IR, IN, IIMSC, MRL, MRPL, NTPC, NDA, OIL, ONGC, SAIL, ஆயிரக்கணக்கான கி.மீ. ரயில்வே, நூற்றுக்கணக்கான ஸ்டேஷன்ஸ், கல்வி நிலையங்கள், சாலைகள் , எல்லாமே எந்த ஆட்சி இருந்தாலும் நடந்து கொண்டு இருக்கும் விஷயங்கள். அப்படியே காங்கிரஸ் செய்து இருந்தாலும் இப்போ இருப்பது காங்கிரஸ் அல்ல, ஒரு ஊழல் கூட்டம். ஆகையால் தயவு செய்து இதை எங்கயோ சேவ் செய்து விட்டு மீண்டும் மீண்டும் காப்பி பேஸ்ட் செய்வதை நிறுத்தவும்....
Rate this:
Share this comment
Cancel
syed - Dammam,சவுதி அரேபியா
18-மார்-201817:24:12 IST Report Abuse
syed 30 வருஷத்துல நாம் இருப்போமா இல்லையோ ??? இன்னும் 30 வருஷமா??? அப்போ இன்னும் முன்னேறவில்லையா ??? இன்னைக்கு என்ன நாடு நிலைமை மற்றும் இளைஞருக்காக வேலை வாய்ப்பு கிடைச்சுதா ?? மக்கள் அமைதியா இருக்காங்களா அடுக்கு வழி சொல்லுங்கடான்னா??
Rate this:
Share this comment
Cancel
Mohamed Riswan - chennai,இந்தியா
18-மார்-201816:05:35 IST Report Abuse
Mohamed Riswan இந்த முப்பது ஆண்டுகளில் காங்கிரஸ் நேரடியாக 15 ஆண்டுகளும் காங்கிரசின் தயவினால் 2 ஆண்டுகளும் ஆட்சி நடைபெற்றுள்ளது, இது போற்றுதலுக்கு உரிய விஷயம்தானே? நன்றி சொல்வோம் நரசிம்மராவ் மற்றும் சோனியா அவர்களுக்கு.
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
18-மார்-201816:58:30 IST Report Abuse
sankarடீக்கடையில் வேலை பார்த்த சோனியாவின் குடும்ப வளர்ச்சியா சொல்லறீங்களா . அதுக்கு அவங்க தான் நமக்கு நன்றி சொல்லுவாங்க மனசுக்குள்ள...
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
18-மார்-201819:27:36 IST Report Abuse
Rahimநீ ஒத்துக்க மாட்டாய் , பால் க்ருக்மேன் சொன்னது இந்திய பொருளாதாரம் பற்றி ஆனால் உனக்கு வயிறு எரியுது அதான் இதை அசிங்கமாக கமெண்ட் செய்கிறாய், உண்மை கசக்கத்தான் செய்யும் ,முப்பது ஆண்டுகள் என்றால் காங்கிரசிற்கு அல்லவே இந்த பெருமை சேரும் என்ற இயற்க்கையான உன் பொறாமைதான் உன் கருத்து வாந்தி....
Rate this:
Share this comment
jagan - Chennai,இந்தியா
18-மார்-201820:44:56 IST Report Abuse
jaganநரசிம்மராவ் சரி , மன்மோகன் சரி மிகப்பெரிய சீர்திருத்தம் 1991 முதல் 2000 வரை நடந்தது அப்போ சொக்க தங்கம் மிஸ்ஸிங்...எனவே காங் ஆட்சியில் என்று சொல்லலாம்..சோனியாவை சேர்ப்பது டூ மச்...
Rate this:
Share this comment
Cancel
18-மார்-201814:25:58 IST Report Abuse
ஆரூர்ரங் நேரு குடும்பம்   நேரடியாக ஆளாத ஆண்டுகளில் மட்டுமே நன்கு வளர்ந்தோம். அந்தக் குடும்பம்  ஆண்டபோதெல்லாம் உலக வளர்ச்சியை விட   நம் வளர்ச்சி மிகவும் கீழே இருந்ததை என்னால் விவரங்களுடன் அளிக்கமுடியும். நேரு இந்திரா ராஜீவ் சென்றது உருப்படா  ரஷ்ய சோஷலிசப்பாதையில். ஆனால் நரசிம்ம ராவ் மன்மோகன் பயணித்தது நேருவின் அரசியல் எதிரி ராஜாஜியின் தாராளமயமாக்கல் பாதையில்தான் ...
Rate this:
Share this comment
Cancel
பிரகதீஸ்வரன் - erode,இந்தியா
18-மார்-201814:06:05 IST Report Abuse
பிரகதீஸ்வரன் சார் ஒத்துக்க மாட்டோம் சார்.. நீங்க ஒரு காவி கைக்கூலி சார்.. நீங்க ஒரு சாதி அடிவருடி சார்...
Rate this:
Share this comment
maharaja - Kuwait,குவைத்
18-மார்-201817:25:16 IST Report Abuse
maharajaநீ இந்த செய்தியையே புரிஞ்சுசிக்கல்ல. உன்னை எல்லாம் வச்சி தான் உங்க கூட்டம் ஓட்டுது. எல்லாம் தலை எழுத்து...
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
18-மார்-201813:45:47 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam அன்புள்ள இந்தியா, பப்பா மரத்தில் ஏறிவிடாதே பொருளாதார முன்னேற்றம் என்றால், என்ன? குடிசைவாதிகளின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதா? மாநிலங்கள் பெற வேண்டிய உரிமைகளையும் மானியங்களையம் முறைப்படி பெறுகின்றனவா? எல்லாவற்றுக்கும் மேலாக, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை, மத்திய அரசு நிறைவேற்றுகிறதா? இப்படிப்பட்ட பல விடயங்களை ஆராயப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை