கொள்ளையடித்த பணத்தில் கட்சி : தினகரன் மீது அமைச்சர் பாய்ச்சல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொள்ளையடித்த பணத்தில் கட்சி : தினகரன் மீது அமைச்சர் பாய்ச்சல்

Added : மார் 19, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்: ''அ.தி.மு.க.,வைப்பிடித்த தொல்லை நீங்கியது. கொள்ளையடித்த பணத்தில் தினகரன் கட்சி துவங்கியுள்ளார்,'' என அமைச்சர் சீனிவாசன் பேசினார்.திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட செயலர் மருதராஜ் தலைமையில் நடந்தது. அமைப்பு செயலாளர் நத்தம் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார்.அமைச்சர் சீனிவாசன் பேசியதாவது:நமக்குள் ஒற்றுமையாக இருந்தால் கூட்டுறவு தேர்தலில் பதவிகளை கைப்பற்றலாம். தேர்தலில் வெற்றி பெற பணம் என்ற வைட்டமின் தேவை. கட்சி காப்பாற்றும் என இருக்க கூடாது. யார் போட்டியிடுகிறார்களோ அவர்கள் செலவு செய்ய வேண்டும்.'ஒருமாதத்தில் ஆட்சி கவிழும், கட்சி, கொடி கைப்பற்றுவோம்' என ஒருவர் கூறிக்கொண்டு இருந்தார். அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்போதுதான் நம்மை பிடித்த தொல்லை நீங்கியுள்ளது. கொள்ளையடித்த பணத்தில் தினகரன் கட்சி துவங்கியுள்ளார். துவங்கியதுமே நாஞ்சில் சம்பத் வெளியேறி விட்டார். நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ,.க்கள், 'தினகரன் புதிய கட்சி துவங்கினால் அதில் சேரமாட்டோம்' என்றனர். ஆனால், கட்சி துவக்க விழாவில் கொடியை பிடித்து நிற்கின்றனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-மார்-201819:32:39 IST Report Abuse
தியாகராஜன்.கரூர் கூவத்தூரில் தங்கியிருந்த போது இந்த ஞானோதயம் வரவில்லையே.
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
19-மார்-201808:33:59 IST Report Abuse
Kuppuswamykesavan அதான் ஊருக்கே தெரியுமே?. ஆனால், நீங்களும், உங்களின் ரத்தத்தின் ரத்தங்களும், அப்படி பண்ணாம, அரசியல் மட்டுமே பண்ணுங்க?.
Rate this:
Share this comment
Cancel
19-மார்-201806:35:48 IST Report Abuse
ஆப்பு பாம்பறியும் பாம்பின் கால். அதுலெய்யும் முன்னிலை திரு.நத்தம் விஸ்வநாதன்... சூப்பர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X