தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்த சட்ட மசோதா | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்த சட்ட மசோதா

Added : மார் 21, 2018 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை: தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா, சட்டசபையில், நேற்று தாக்கல் செய்யப்பட்டது.சட்டசபையில், ரத யாத்திரையை தடுத்து நிறுத்தக் கோரி, தி.மு.க.,வினர் அமளியில் ஈடுபட்ட போது, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர், இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.இந்த மசோதா, '2018ம் ஆண்டு, தமிழ்நாடு தனியார் மருத்துவமனை நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திருத்த சட்டம்' என, அழைக்கப்படும்.மாநிலத்தில் உள்ள, தனியார் மருத்துவமனைகள், மருத்துவ இல்லங்கள் மற்றும் பிற மருத்துவ நிறுவனங்களை, பதிவு செய்வதன் வாயிலாக, அவற்றை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும், 1997ல், தமிழ்நாடு தனியார் மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் இயற்றப்பட்டது. எனினும், அதற்கான விதிகள் இயற்றப்படாததால், சட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. மத்திய அரசு, 2010ல், மருத்துவ நிறுவனங்களை பதிவு செய்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தை இயற்றி, மாநில அரசுக்கு அனுப்பி வைத்தது.தமிழக அரசு, ஏற்கனவே சட்டம் இயற்றி இருந்ததால், அந்த சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளவும், மாநில சட்டத்தையும், மத்திய அரசு சட்டத்தையும் ஆராய்ந்து பரிந்துரை வழங்க, வல்லுனர் குழு அமைக்கப்படும் என, 2012 - 13ல் அறிவிக்கப்பட்டது.அதன்படி, வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவும், அரசுக்கு பரிந்துரைகளை வழங்கியது. அதன் அடிப்படையில், மாநிலத்தில் உள்ள, அனைத்து மருத்துவ நிறுவனங்களைப் பதிவு செய்வதற்கும், முறைப்படுத்துவதற்கும், 1997ம் ஆண்டு சட்டத்தில், தேவையான திருத்தங்கள் கொண்டு வர, அரசு முடிவு செய்து உள்ளது.இதற்கான புதிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில், முதன்மை சட்டத்தில், 'தனியார் மருத்துவமனை நிறுவனம் மற்றும் தனியார் மருத்துவமனை நிறுவனங்கள்' என்ற சொற்றொடர், எங்கெல்லாம் வருகிறதோ, அங்கெல்லாம், 'மருத்துவமனை நிறுவனம் மற்றும் மருத்துவமனை நிறுவனங்கள்' என, சொற்றொடர் மாற்றி அமைக்கப்படுகிறது.சட்டத்தை நடைமுறைப்படுத்த, மாநில அளவில், மாவட்ட அளவில் குழு அமைப்பது குறித்தும், சட்டத்தில் வரையறை செய்யப்பட்டு உள்ளது. மருத்துவ நிறுவனங்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - kerala,இந்தியா
21-மார்-201815:45:15 IST Report Abuse
rajan சட்டம் போட்டு எப்படி காசு பார்க்கணும்னு நல்ல தெரியுமே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை