சீட் தராவிட்டால் தனித்து போட்டி! : 'குத்து' ரம்யாவின் தாய் மிரட்டல் | Dinamalar

சீட் தராவிட்டால் தனித்து போட்டி! : 'குத்து' ரம்யாவின் தாய் மிரட்டல்

Added : மார் 21, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பெங்களூரு: கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் போட்டியிட, 'சீட்' தராவிட்டால், சுயேச்சையாக போட்டியிடப் போவதாக, காங்., கட்சியின் சமூக ஊடக பிரிவு தலைவரும், நடிகையுமான, குத்து ரம்யாவின் தாய், மிரட்டல் விடுத்துள்ளார்.கர்நாடகாவில், காங்.,கை சேர்ந்த, சித்தராமையா முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், காங்., கட்சியின் சமூக ஊடகப்பிரிவு தலைவரும், பிரபல நடிகையுமான, குத்து ரம்யாவின் தாய், ரஞ்சிதா, தனியார், 'டிவி'க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:கர்நாடகாவில் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில், மாண்டியா தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். எனக்கு சீட் தராவிட்டால், சுயேச்சையாக களமிறங்குவேன். அதேபோல், என் மகள், ரம்யாவுக்கு, காங்., கட்சியில் தகுந்த பதவி வழங்கப்பட வேண்டும்.காங்., கட்சியில், 28 ஆண்டுகளாக கடுமையாக உழைத்துள்ளேன். அதை அங்கீகரிக்கும் வகையில் எனக்கு இதுவரை எதுவும் செய்யப்படவில்லை. இதனால், மனம் வெறுத்து போய் உள்ளேன்.காங்., கட்சியின் சமூக ஊடகப் பிரிவு தலைவராக, ரம்யா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அது ஒரு முக்கியமான பதவி. ஆனால் அதை, மாண்டியா மக்கள் புரிந்து கொள்ளவில்லை. ரம்யாவுக்கு, கட்சியில் முக்கியமான பதவி அளித்தால் மட்டுமே, மாண்டியா பகுதி மக்களுக்கு ஏற்புடையதாக இருக்கும். தகுந்த பதவி கிடைத்தால், மாண்டியா மக்களுக்கு, ரம்யா ஏராளமான உதவிகளை செய்வார்.இவ்வாறு அவர் கூறினார்.தன் தாய், ரஞ்சிதாவின் எச்சரிக்கை பேட்டி குறித்து, கருத்து தெரிவிக்க, நடிகை, ரம்யா மறுத்து விட்டார். ரம்யாவுக்கு, திவ்யா ஸ்பந்தனா என்ற, மற்றொரு பெயரும் உண்டு. தமிழில், குத்து, வாரணம் ஆயிரம், பொல்லாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RENU - Chennai,இந்தியா
21-மார்-201809:45:13 IST Report Abuse
RENU thaai ettadi paaindhaal
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை