உள்ளாட்சி தேர்தல் நடத்த தயார்: அமைச்சர் வேலுமணி அறிவிப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் நடத்த தயார்: அமைச்சர் வேலுமணி அறிவிப்பு

Added : மார் 22, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ''பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள, நாங்கள் தயாராக இருக்கிறோம்,'' என, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
சட்டசபை காங்., தலைவர், ராமசாமி: உள்ளாட்சி தேர்தலை, உடனடியாக நடத்த வேண்டும். வார்டு வரையறை பணிகளை காரணம் காட்டி, தேர்தலை தள்ளிப்போடக் கூடாது; இந்த காரணத்தை ஏற்க முடியாது. உள்ளாட்சி அதிகாரிகளின் பதவிக்காலம் மட்டும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலை நடத்தாவிட்டால், அடிப்படை ஜனநாயக கட்டமைப்பு சீர்குலைந்து விடும்.
அமைச்சர் வேலுமணி: 2016ல், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, பெரும்பாலான பணிகள் முடிவு பெற்றன. கடைசி நேரத்தில், நீதிமன்றத்தை அணுகி, தேர்தலை நிறுத்தியது யார் என்பது, அனைவருக்கும் தெரியும். இவ்விஷயத்தில், உச்ச நீதிமன்றம் வரை சென்றது, யார் என்பதும் தெரியும். உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, தேர்தலை எதிர்கொள்வதற்கு, நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை தெளிவுப்படுத்தி விட்டோம். வார்டு வரையறை தொடர்பாக, மாவட்ட வாரியாகவும், மண்டல வாரியாகவும், ஏராளமான புகார்கள் வந்துள்ளன. அவற்றை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. இப்பணி முடிந்ததும், தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை