குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு| Dinamalar

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு

Added : மார் 22, 2018 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Criminal,  Supreme Court,  Central Government, குற்றவாளி , உச்ச நீதிமன்றம், மத்திய அரசு , லாலு பிரசாத் யாதவ், ஓ.பி. சவுதாலா, சசிகலா ,குற்றவாளி அரசியல் கட்சிக்கு தலைமை , தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம், குற்றவாளி தலைவருக்கு தடை, 
Lalu Prasad Yadav,  OP. Chautala, Sasikala, criminal head of the political party, disqualified to contest the election, prohibit the culprit leader,culprit,

புதுடில்லி : 'நீதிமன்றங்களால், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகளுக்கு தலைமை தாங்குவதை தடை செய்ய, சட்டத்தில் இடமில்லை' என, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டோர், அரசியல் கட்சிக்கு தலைமை தாங்குவதற்கு தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு கட்சிக்கு தலைமை தாங்குவோராக, லாலு பிரசாத் யாதவ், ஓ.பி. சவுதாலா, சசிகலா ஆகியோர், அம்மனுவில் உதாரணங்களாக, குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில், நீதிமன்றத்தில் கூறியதாவது: நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்யப்பட்டோர், புதிய கட்சியை துவக்கவும், ஏற்கனவே உள்ள கட்சிக்கு தலைமை தாங்கவும் தடை விதிக்கும் வகையிலான சட்டம், தற்போது அமலில் இல்லை.

ஒரு கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பது, அந்த கட்சியில் உள்ள பிரதிநிதிகள் முடிவு செய்ய வேண்டிய விஷயம். ஒருவர், தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால், அவர் தலைமையில் துவக்கப்படும் கட்சியை பதிவு செய்யக்கூடாது என, தேர்தல் கமிஷனை தடுப்பது சாத்தியமில்லை. இவ்வாறு அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-மார்-201813:40:23 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் தவறான வாதம் , சட்டத்திருத்தம் செய்து வழி செய்யவேண்டும். குற்றவாளிகள் கட்சி தலைவர்களாக இருந்தால் ஜனநாயகம் கேலிக்கூத்தாகிவிடும்.
Rate this:
Share this comment
NRK Theesan - chennai,இந்தியா
22-மார்-201816:47:16 IST Report Abuse
NRK Theesanஉண்மை .தன் வழக்கை தானே நீதிபதியாக நடத்துவதற்கு ஒப்பானது .கொள்கையை வழிநடத்துபவன் தலைவன் .கட்சிக்கு தலைவனே தவிர தலைவனுக்கு கட்சி இல்லை ஒரு குடும்பத்தில் ஒருவருக்கே பதவி MLA MP போன்றவர்களும் கட்சி பதவி கூடாது .அரசு ஊழியம் பெறும் எவரும் கட்சி பதவி கூடாது ....
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy M - Chennai,இந்தியா
22-மார்-201811:08:00 IST Report Abuse
Ramamoorthy M இது தான் நம் நாட்டின் சாபக்கேடு... ஒரு கேவலமான அரசியல் அமைப்புச் சட்டம். அதை மாற்றி அமைக்க (திருத்தம் செய்ய) எந்த அரசியல் கட்சியும் தயாராயில்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விசயம். என்ன செய்வது?...
Rate this:
Share this comment
Prof. A.Venkateswaran. - Thanjavur,இந்தியா
22-மார்-201813:04:05 IST Report Abuse
Prof. A.Venkateswaran.என்ன செய்வது என நீங்களே கேட்கும்போது எதுவும் செய்ய முடியாது என்பதே பதில். மாறாக, நல்லவர்கள் ஒன்றுகூடி கட்சி துவங்கி, தேர்தலில் நின்று, வெற்றி பெற்று, 2/3 பெரும்பான்மை பெற்று, நீங்கள் குறிப்பிட்ட கேவலமான அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றுவோம் வருகிறீர்களா? நான் உடன் வரத்தயார். என்னிடம் திட்டம் உள்ளது....
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
22-மார்-201811:07:13 IST Report Abuse
Nallavan Nallavan \\\ ஒருவர், தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால், அவர் தலைமையில் துவக்கப்படும் கட்சியை பதிவு செய்யக்கூடாது என, தேர்தல் கமிஷனை தடுப்பது சாத்தியமில்லை. //// அப்போ ஏன் ஜனநாயகத்தோட தூண் -ன்னு நிக்கிறீங்க ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X