4500 ஆண்டுகள் பழமையான மொழி தமிழ்: ஆய்வில் தகவல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

4500 ஆண்டுகள் பழமையான மொழி தமிழ்: ஆய்வில் தகவல்

Added : மார் 22, 2018 | கருத்துகள் (248)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Tamil language, Ancient language Tamil,Dravidian language family, தமிழ் மொழி, பழமையான மொழி தமிழ், ஜெர்மனி மேக்ஸ் பிளான்க் கல்வி நிறுவனம், டேராடூன் இந்திய வன உயிர் கல்வி நிறுவனம், மொழி ஆராய்ச்சி ,  திராவிட மொழிக்குடும்பம், 4500 ஆண்டுகள் பழமையான மொழி தமிழ்,  Germany Max Planck Educational Institute, Dehradun Indian Forest Biotechnology Institute, Language Research, 4500 years old Tamil,

புதுடில்லி: தமிழ் உட்பட 82 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக்குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையான மொழி என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் மிகப் பழமையான மொழி தமிழ் தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் மேக்ஸ் பிளான்க் கல்வி நிறுவனமும், டேராடூன் இந்திய வன உயிர் கல்வி நிறுவனமும் இணைந்து மொழி ஆராய்ச்சி நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டனர்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தெற்காசிய பகுதி 600 மொழிகளின் தாயகமாக விளங்கியுள்ளது. அவை திராவிடம், இந்தோ-ஐரோப்பா, சீனா-திபெத்தியம் உட்பட 6 மொழிக் குடும்பங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டன. இந்த 6 மொழி குடும்பங்களில் முதன்மையானதும், பழமையானதும் திராவிட மொழிக்குடும்பமே. இது சுமார் 4,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட சுமார் 80 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழியை 22 கோடி மக்கள் தற்போது பேசுகின்றனர். இதில் பழமையான மொழி தமிழ். சமஸ்கிருதம் போல் சிதைந்து போகாமல் தமிழ் மொழியின் கல்வெட்டுக்களும், காப்பியங்களும் தற்காலம் வரை காணக்கிடைக்கின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (248)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Rama Krishnanan - Mayur Vihar,இந்தியா
26-மார்-201814:43:14 IST Report Abuse
Siva Rama Krishnanan தமிழ் மிக பழமையான மொழிதான் ஆனால் அதை விரிவு படுத்தாமல் ஒலிக்கேற்ப எழுத்து சீர் திருத்தம் செய்யாமல் விட்டு விட்டதால் அறிவியல், மருத்துவம் சட்டம் ஆகிய துறை களில் உள்ள எல்லா வார்த்தைகளுக்கும் ஏற்ப சரியான எழுத்துக்கள் தமிழிலில் இல்லை என்பதே உண்மை உதாரணம் ga kha gha ka இந்த ஒலிகளுக்கு ஒரு க தான் இப்படியே ba bha pha fa . dha ta tha . முதலில் எழுத்து சீர் திருத்தம் செய்தால் நம் மொழியை மிஞ்ச எதுவும் இல்லை
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
25-மார்-201802:42:30 IST Report Abuse
மலரின் மகள் 25 லக்ஸம் லைக்கிங்ஸ் நோக்கி அடி எடுத்துவைக்கும் தினமலருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
G. DHARMALINGAM - COIMBATORE,இந்தியா
23-மார்-201816:00:45 IST Report Abuse
G. DHARMALINGAM கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முந்தோன்றி மூத்த தமிழ்குடி
Rate this:
Share this comment
kandhan. - chennai,இந்தியா
24-மார்-201820:20:00 IST Report Abuse
kandhan.அப்ப ஏண் தமிழை எல்லா துறைகளிலும் ஒதுக்கி வைக்கிறீர்கள் ???? தமிழ் தமிழ் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லியே ஆட்சியாளர்களும் வேறு மாநில மொழிக்கு மறைமுகமாக உதவி செய்வது சரியா ????என்பதை சிந்தித்தால் நம் மக்களுக்கு உண்மை புரியும் ,நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்பதும் புரியும் சிந்தியுங்கள் மக்களே .....முதலில் தமிழில் பேச முற்படுங்கள் பிறகு தமிழ் வளர்வதை நீங்கள் உணர்வீர்கள்..செய்வீர்களா செய்வீர்களா ??????? கந்தன் சென்னை...
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
25-மார்-201802:40:33 IST Report Abuse
Ray"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த தமிழ்" என்பதே சரி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X