அரசு சட்ட கல்லூரி இடமாற்றம் ஏன்? அமைச்சர் சண்முகம் விளக்கம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு சட்ட கல்லூரி இடமாற்றம் ஏன்? அமைச்சர் சண்முகம் விளக்கம்

Added : மார் 22, 2018
Advertisement

சென்னை:''சென்னை, அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி, உயர் நீதிமன்ற உத்தரவின்படியே இடமாற்றம் செய்யப்பட உள்ளது,'' என, சட்டத்துறை அமைச்சர், சி.வி.சண்முகம் தெரிவித்தார்.சட்டசபையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:தி.மு.க., - எழிலரசன்: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள, அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி, மிகவும் பழமையானது. இக்கல்லுாரியில், மறைந்த முதல்வர்கள், அண்ணாதுரை, பக்தவச்
சலம், முன்னாள் ஜனாதிபதி, வெங்கட்ராமன் உட்பட பலர் படித்துள்ளனர்.இக்கல்லுாரியில், 2008ல் நடந்த, வன்முறை சம்பவம் குறித்து விசாரிக்க, நீதிபதி, சண்முகம் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரைப்படி, இக்கல்லுாரி இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பட்டரை பெரும்புதுாரிலும், காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பாக்கம் கிராமத்திலும், சட்டக் கல்லுாரி துவக்கப்படஉள்ளது.விதிமுறைகளின்படி, மாவட்ட நீதிமன்றத்திலிருந்து, 16 கி.மீ., தொலைவிற்குள், சட்டக் கல்லுாரி அமைய வேண்டும்; இந்த விதி, மீறப்படுகிறது.சென்னை, உயர் நீதிமன்ற வளாகத்தில், அரசு சட்டக் கல்லுாரி அமைந்துள்ளதால், மாணவ - மாணவியர், நீதிமன்ற நடவடிக்கைகளை பார்த்து, கற்பது எளிதாக உள்ளது. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் கட்டப்படும் கல்லுாரிகளும் செயல்படட்டும். உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, கல்லுாரியும் செயல்படட்டும்; அதை மாற்றக் கூடாது.
அமைச்சர் சி.வி.சண்முகம்: நீதிபதி, சண்முகம் குழு, உங்கள் ஆட்சியில் தான் அமைக்கப்பட்டது. அந்தக் குழு, சென்னைக்கு வெளியே, மூன்று கல்லுாரிகளை ஏற்படுத்தி, அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரியை இடமாற்றம் செய்ய, பரிந்துரை செய்தது.அதை செயல்படுத்தும்படி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.இதில், அரசு தன்னிச்சையாக முடிவு செய்யவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவின்படியே, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம், பட்டரை பெரும்புதுாரில், 117.30 கோடி ரூபாய் மதிப்பில், சட்டக் கல்லுாரிக்கான கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இடம் தேர்வு செய்தது உட்பட அனைத்தையும், உயர் நீதிமன்றமே செய்தது.
இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை