சென்னை:''முன்னாள் முதல்வர், ஜெயலலிதா, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தபோது, மருத்துவமனையில், அப்பகுதியில் இருந்த, கண்காணிப்பு கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டன,'' என, சென்னை, அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர், பிரதாப் ரெட்டி கூறினார்.
பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் பற்றிய கருத்தரங்கம், அப்பல்லோ மருத்துவமனை சார்பில், சென்னையில் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற பின், பிரதாப் ரெட்டி அளித்த பேட்டி:
சிறப்பான சிகிச்சை
ஜெயலலிதா, ஆபத்தான நிலையில் தான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும், அவருக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. எங்கள் மருத்துவமனை டாக்டர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டைச் சேர்ந்த நிபுணர்களும், சிறப்பான சிகிச்சை அளித்தனர்.
ஒரு நாள், இரண்டு நாள் அல்ல... பலநாட்களாக, பல வாரங்களாக, அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் காரணமாகவே, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
அதனால் தான், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து, சாதாரண வார்டுக்கு, அவர் மாற்றப்பட்டார். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக, திடீர் மாரடைப் பால் உயிரிழந்தார்.அப்பல்லோவை பொருத்தவரை, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை, நெருங்கிய உறவினர்கள் மட்டுமே, பார்க்க அனுமதிப்போம்.
ஜெ., அனுமதிக்கப்பட்டதும், மருத்துவமனையின் அப்பகுதியில்இருந்த, கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும், 'ஆப்' செய்யப்பட்டன. அவர் சிகிச்சை பெறுவதை, யாரும் பார்க்கக் கூடாது என்பதற்காக, அங்கிருந்த கேமராக்கள் அகற்றப்பட்டு விட்டன.
ஆஜராக தயார்:
அவர் சிகிச்சை பெற்ற பகுதியில் இருந்தநோயாளிகளும், வேறு வார்டு களுக்கு மாற்றப்பட்டனர். ஜெ.,க்கு சிகிச்சை அளித்த விவகாரத்தில், நாங்கள் வெளிப்படை யாகவே இருக்கிறோம். அவருக்கு அளிக்கப் பட்ட சிகிச்சை குறித்த, அனைத்து ஆவணங் களையும், விசாரணை கமிஷனிடம் சமர்ப்பித்து விட்டோம். கமிஷனில் இருந்து, எப்போது அழைப்பு வந்தாலும், ஆஜராக தயராக இருக்கிறோம். விசாரணை நிறைவடைந்த பின், நாங்கள் சமர்ப்பித்த ஆவணங்களை திருப்பி அளிப்பர் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (38+ 62)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply