'ஒரு யுகமானாலும் ஆதார் தகவல்களை திருட முடியாது'| Dinamalar

'ஒரு யுகமானாலும் ஆதார் தகவல்களை திருட முடியாது'

Added : மார் 23, 2018 | கருத்துகள் (43)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Aadhaar card,Ajay Bhushan Pandey, Aadhaar Information, ஆதார்,  ஆதார் தகவல்கள், ஆதார் அடையாள அட்டை வழங்கும் ஆணையம், உச்ச நீதிமன்றம் விசாரணை,  நீதிபதி தீபக் மிஸ்ரா,அஜய் பூஷண் பாண்டே, பவர் பாய்ன்ட் தொழில்நுட்பம் , ஆதார் அட்டை,ஆதார் தகவல்கள் திருட்டு , Aadhaar,  Supreme Court Inquiry, Judge Deepak Mishra,  Powerpoint Technology, Aadhaar Card, Aadhaar ​​Identity card issuing authority,ஒரு யுகம், ஒரு யுகமானாலும் ஆதார் தகவல்களை திருட முடியாது

புதுடில்லி : 'ஆதார் தகவல்களை திருடுவதற்கு, ஒரு யுகமானாலும், யாராலும் முடியாது' என, ஆதார் அடையாள அட்டை வழங்கும் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆதார் வழக்கு தொடர்பான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆதார் அடையாள அட்டை வழங்கும் ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே நேற்று ஆஜராகி, 'பவர் பாய்ன்ட்' தொழில்நுட்ப உதவியுடன் விளக்கம் அளித்தார்; அப்போது அவர் கூறியதாவது:

ஆதார் அட்டையில் பெறப்பட்டுள்ள தகவல்கள் மிகவும் பாதுகாப்பானவை. இவை, இணையதளத்துடன் இணைக்கப்படவில்லை. இந்த தகவல்கள் கசிய வாய்ப்பில்லை. அரசின் சலுகைகள், மானியங்கள், ஒருவருக்கு கூட மறுக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, ஆதார் திட்டம் அமல் படுத்தப்பட்டது.

தேசிய அளவில், ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அடையாள அட்டையாக, ஆதார் உள்ளது. ஆதாரில் பெறப்பட்டுள்ள தகவல்கள், மிகவும் பாதுகாப்பானவை. இவற்றை திருடுவதற்கு, ஒரு யுகமானாலும், யாராலும் முடியாது. வங்கிகளுக்கு, ஆதாரில் பெறப்பட்டுள்ள விரல் ரேகை, கருவிழி அடையாளங்கள் வழங்கப்படவில்லை.

ஆதார் அட்டையில் பெறப்பட்டுள்ள விரல் ரேகை ஒத்துப் போகாததால், சிலருக்கு சலுகைகள் மறுக்கப்படுவதாக, தகவல்கள் வந்துள்ளளன. விரல் ரேகை ஒத்து போகாவிட்டால், வேறு அடையாளங்களை வைத்து, வழங்க வேணடும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
29-மார்-201811:50:19 IST Report Abuse
Malimar Nagore கோயிலில் உள்ள சிலையியை திருடிக்கொண்டு போய்விடுகின்றனர். ஆதாரம் இல்லாத ஆதாரை திருடிக் கொண்டு போவதற்கு எத்தனை நேரம் வேண்டும். மேடை ஏறி பேசும் பொது ஆற வார பேச்சு. கீழே இறங்கிப் போகும் பொழுது சொன்னதல்லாம் போச்சு.
Rate this:
Share this comment
Cancel
raja - chennai,இந்தியா
24-மார்-201812:25:52 IST Report Abuse
raja ஆதார
Rate this:
Share this comment
Cancel
raja - chennai,இந்தியா
24-மார்-201812:25:09 IST Report Abuse
raja ஆதரா அப்படினா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X