நதிகளை இணைப்பதன் மூலம் காவிரி பிரச்சினைக்கு தீர்வு : கட்காரி| Dinamalar

நதிகளை இணைப்பதன் மூலம் காவிரி பிரச்சினைக்கு தீர்வு : கட்காரி

Updated : மார் 23, 2018 | Added : மார் 23, 2018 | கருத்துகள் (127)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நிதின் கட்காரி, நதிகள் இணைப்பு, காவிரி பிரச்னை, உலக தண்ணீர் தினம்,  மத்திய அமைச்சர் நிதின் கட்காரி,  கோதாவரி நதி, இந்திராவதி நதி, நதிகளை இணைக்கும் திட்டம் , காவிரி பிரச்சினைக்கு தீர்வு, 
Nitin Gadkari, rivers connection, Cauvery dispute, World Water Day, Union Minister Nitin Gadkari, Godavari River, Indravati River, Project for connecting rivers, Cauvery dispute settlement,

புதுடில்லி : உலக தண்ணீர் தினத்தையொட்டி டில்லியில் நடந்த கருத்தரங்கில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பங்கேற்று, பேசினார்.

அப்போது அவர், மாநிலங்களுக்கு இடையே தண்ணீரை பங்கீடு செய்வதில் மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இதற்கான நீண்டகால திட்டத்தை அரசு தீட்டி வருகிறது. மகாராஷ்டிராவில் ஓடும் கோதாவரியின் கிளை நதியான இந்திராவதியில் தண்ணீர் எப்போதும் அதிக அளவில் செல்கிறது. எனவே அங்கிருந்து தெலுங்கானா மாநிலம் காலேஸ்வரம் அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். பின்னர் அங்கிருந்து ஆந்திர மாநிலம் போலாவரம் அணை, நாகர்ஜூனா சாகர் அணை வழியாக கிருஷ்ணா நதியில் தண்ணீர் இணைக்கப்படும். இந்த தண்ணீர் சோமசிலா அணை மூலம் பெண்ணாறு வழியாக காவிரியில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கோதாவரியில் இருந்து 3 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதில் இருந்து சுமார் 1,000 டி.எம்.சி. தண்ணீரை இவ்வாறு இணைப்பதன் மூலம் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க முடியும். இந்த திட்டம் குழாய் மூலம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தவிர மேலும் 30 நதிகளை இணைக்கும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளது. இத்திட்டங்கள் இந்த ஆண்டு தொடங்கி படிப்படியாக செயல்படுத்தப்படும். நதிகளை இணைப்பதன் மூலம் காவிரி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (127)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C Suresh - Charlotte,இந்தியா
29-மார்-201810:43:39 IST Report Abuse
C Suresh இந்த நாலு வருடங்களில் செய்தது என்ன.. கார்போரேட்டுகளுக்கு நாட்டை விற்றதை தவிர.. ஏர் இந்தியா வும் விற்கப்படுகிறது...
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
29-மார்-201809:26:30 IST Report Abuse
Anandan உச்ச நீதிமன்றம் சொன்னதை செய்ய சொன்னா இவனுங்க பேசுற விதமே ஒரு தினுசா இருக்கே.
Rate this:
Share this comment
Cancel
Senthil Vel - Dharmapuri,இந்தியா
24-மார்-201804:41:57 IST Report Abuse
Senthil Vel முதலில் காவேரி மேலாண்மை வாரியம் அமையுங்கள்
Rate this:
Share this comment
Cancel
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) இந்திய நதிகளை இணைப்பது மிகவும் சுலபம்... தங்க நாற்கர தார்ச்சாலைகள் இருபுறமும் நீர் வழித்தடத்தை அமையுங்கள் பின்னர் அருகில் இருக்கும் நதியோடும் அந்த நீர்neer வழித்தடத்தை இணையுங்கள்...அவ்வளவுதான் ... தண்ணீரும் அனைத்து இந்தியனுக்கும் கிடைக்கும் ... நீர் வழி போக்குவரத்தும் நடக்கும்...ஒரே கல்லுல ரெண்டு மாங்கா...சிந்தித்து செயல்பட்டால் சிறப்பு ?
Rate this:
Share this comment
Cancel
Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா
23-மார்-201820:50:52 IST Report Abuse
Rajhoo Venkatesh சும்மா மக்கள் காதில் பூ சுற்றிக்கொண்டே காலத்தை ஓட்டுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
R chandar - chennai,இந்தியா
23-மார்-201820:48:14 IST Report Abuse
R chandar This plan is a long term plan initially you obey court order and form cauvery management board and release water on phased manner on every month after completition of rainy season this will definitely help tamilnadu people Do it at first
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
23-மார்-201820:39:44 IST Report Abuse
GB.ரிஸ்வான் லூசு காவிகள்.....
Rate this:
Share this comment
Cancel
மணிமேகலை - paris ,பிரான்ஸ்
23-மார்-201820:38:41 IST Report Abuse
மணிமேகலை  காவிரி மேலாண்மைவாரியத்துக்கு சங்கு ஊதியாச்சு .
Rate this:
Share this comment
Cancel
Tamil - Bangalore,இந்தியா
23-மார்-201820:17:17 IST Report Abuse
Tamil You do it slowly no problem, but as an emergency purpose cauvery management board. IF start joining the rivers don't know how many years it will take to complete and more politics will occur in this also and there is a chance of due to financial problems it could get stop or even delay for centuries. At this point cauvery management board is a correct solution to share water.
Rate this:
Share this comment
Cancel
srgmsbhaskar - Trichy,இந்தியா
23-மார்-201819:49:33 IST Report Abuse
srgmsbhaskar இதற்கு ஒரே வழி நதிகளை மற்றும் நீர் நிலைகளை தேசிய பட்டியலிலும், அதற்க்கு பதிலாக ரயில்வேயை மாநில (அல்லது பொது) பட்டியலுக்கும் மாற்றுவதே சிறந்த வழி. நதிகளை தேசிய பட்டியலுக்கு மாற்றி அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகளை மத்திய அரசு ஏற்க வேண்டும், பிறகு நதிகளை இணைத்து நீர் மேலாண்மை செய்ய வேண்டும்..
Rate this:
Share this comment
suresh - chennai,இந்தியா
23-மார்-201821:03:29 IST Report Abuse
suresh<நதிகளை இணைத்து நீர் மேலாண்மை செய்ய வேண்டும்..> அது வரை காவேரி வேண்டாம் என சொல்கிறீர்களா ? சார் உங்க தீர்ப்பு கொஞ்சம் சரி இல்லே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை